நாடு கடந்த தமிழீழ அரசு ஈழவரலாற்றுத் தேவை: ருத்திரகுமாரன்!
இதில் விடியோ கான்பிரன்சிங் முறையில் உலகின் பல்வேறு நாடுகளிலில் இருந்த வந்திருந்த தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பேசி ருத்திரகுமாரன் தனது உரையில்...'' தமிழீழ மக்களின் அரசியல் வேட்டையை உயிர்ப்புடன் காத்து, தமிழர் தாயகம். தேசியம் தனியுரிமை ஆட்சியதிகாரம் ஆகியவற்றை வென்றெடுக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முழுமைப்படுத்த நாடு கடந்த தமிழீழ அரசு அவசர அவசிய ஈழவரலாற்றுத் தேவை.
கொடுமையானான கொடுங்கோன்மை அடக்குமுறைக்கு எதிரான போராடி வென்ற தேசிய இனங்கள் போல தமிழினமும் வெற்றிபெறும், உலக அரங்கில் விடுதலைபெற்ற இறையான்மை கொண்ட தனித்தமிழீழ அரசை நாம் அடைவோம் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கம் காலம் வெகு தொலைவில் இல்லை.
அதற்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள ஒவ்வொரு நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசு அவை அமைக்கப்படவேண்டும். அதற்கு அந்நாட்டு மக்களிடமே தேர்தல் நடத்தி தமிழீழ அரசு அவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். இதுதான் தமிழீழ அரசின் மீது தமிழ்மக்கள்உணர்வு கொள்ள சரியான வழி. இந்த அமைப்பின் மூலம் உலகளாவிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்."என்றார்.
இந்த கூட்டத்தில் பேராசிரியர் ஸ்ரீகந்தராஜா நடராஜன், மருத்துவக்காலநிதி சிவநேந்திரன் ஜீவநாயகம், அமெரிக்காவை சேர்ந்த கரண் பார்க்கர், சுவீடனைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் சால்க் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment