போதை சான்ட்விச்
போதைப் பொருளை கடத்து பவர்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காக புதுப்புது உத்திகளை பின்பற்றி வருகின்றனர்.
.
இந்த வரிசையில் ஹாலந்து நாட்டில் சான்ட்விச்சில் போதைப் பொருளை கடத்திச் சென்ற ஆசாமி ஒருவர் பிடிபட்டிருக்கிறார்.
ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்துக்கு வருகை தந்த அந்த மர்ம ஆசாமியின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் சோதனை நடத்தினர். அவர் தனது பெட்டியில் சான்ட்விச் உணவை அடுக்கி வைத்திருந்தார்.
முப்பதுக்கும் மேற்பட்ட சான்ட்விச் பெட்டியில் இருந்ததால், ஒருவருக்கு ஏன் இத்தனை உணவு என்று உஷாரான போலீசார் அதில் சோதனை இட்டனர். அப்போது சான்ட்விச்சுக்கு நடுவே கோகேன் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இப்படி 3 கிலோவுக்கும் மேல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாம்.






0 விமர்சனங்கள்:
Post a Comment