புலிகள் இப்படியும் பணம் சம்பாதித்துள்ளார்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுமார் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் அசாம் விடுதலை போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையொன்றின் போது அசாம் போராளிகளிடமிருந்து மீட்கப்பட்ட இராணுவ ஆவணங்களின் மூலம் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியைத் தழுவுவதற்கு முன்னர் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாரிய யுத்தமொன்றை முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில் பெருந்தொகை ஆயுதங்களை இந்திய கிளர்ச்சியாளர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment