கிளியே! கிளியே! எங்கள் கிராமத்துக் கிளியே!!
கிளியே! கிளியே!
எங்கள் கிராமத்துக் கிளியே
உன் கீச்சிடும் குரல் (கவிதை) கேட்டு
கிழமைகள் பலவாகி விட்டனவே
கிடைத்தற்கரிய உன் குரலால்
கிறங்கிக் கிடந்த நம்மை
கிழமைக்கணக்கில் நீ ஏமாற்றியது ஏனோ?
கீற்றுக் கொட்டகைக்குள் -நீ
எங்கேயாவது சிறைபட்டு கிடந்தாயோ?
கிளியே! கிளியே! எங்கள் கிராமத்துக் கிளியே
நீ கிளிநொச்சிப் பக்கம் சென்று
கிளைகிளையாக தாவித் திரிந்ததாக
கிடைத்த தகவல் உண்மை தானோ?
கிளிநொச்சிப் பகுதியில் இப்போ
கிளர்ச்சிகள் ஏதாவது நடக்கிறதா?
கிளைமோர் குண்டுகள் ஏதாவது
இப்போதும் கிளர்ந்தெழுந்து வெடிக்கிறதா?..
கிளியே! கிளியே! நமது கிராமத்துக் கிளியே!
நமது கிராமமும் நமது கிராமத்தினரும்
நன்றாய் நலமாய் உள்ளனரா?
முக்கனிகள் முன்னொரு காலத்தில்
நமக்கு முழுசாய் கிடைத்ததுவே!
பின்னொரு காலத்தில் நானும் நீயும்
பிஞ்சுகளை கூட பிய்த்து பிய்த்து
பிடுங்கி தின்றது ஞாபகம் வருகிறதா?
கிளியே! கிளியே! நமது கிராமத்துக் கிளியே!
நீ வன்னி பக்கம் சென்று வானுயரப் பறந்தாயோ?
அதன் வனப்பழகை பார்த்து பார்த்து
நீ வட்டமடித்து வட்டமடித்து
வன்னியை சுத்தி சுத்தி திரிந்தாயோ?
வன்னி வான் பரப்பில் நீ பறக்கின்ற போது
விமானப்படையினர் வளைத்துன்னை சுடவில்லையோ?
வாயார நீ உண்பதற்கு வன்னியிலே
வாழைப்பழம் எதாவது உனக்கு கிடைத்ததுவா?..
பிரபாகரன் எங்கள் பிரதேசத்துக்குள்
பிழைக்க வந்த பிற்பாடு - நம்
பிரதேச மக்களை பிடித்துக் கொன்று -நம்
பிரதேசத்தை பிணக்காடாக்கி விட்டானாமே?
பிறர்வாட பல செயல்கள் செய்தானாமே..
பின் பிடரியில் யாரோ அவனை கொத்திக் கொன்றனராமே?
உன்மையெதுவென்று உன்குரலில்
உலகுக்கு உரைப்பாயோ..
கிளியே! கிளியே! எங்கள் கிராமத்துக் கிளியே!
நீ கிளிநொச்சிப் பக்கமாய் பறந்த போது
நமது சிங்கங்களையும் புலிகளையும் பார்த்தாயா?
இன்னமும் அவர்கள் சண்டையுடனும்
சச்சரவுடனும் தான் இருக்கின்றார்களா?..
சமாதானமாய் போய் விட்டார்கள்
சண்டையேதுமில்லை என்று
சனம் இங்கே கதைக்கிறார்களே? -கிளியே
உண்மை எதுவோ நீ உரைத்து செல்வீரோ..
ஊருக்குள் நீ உலாவித் திரிந்த போது
உனக்கு ஒன்றும் நடக்கவில்லையே?
உள்ளத்தை உள்ளபடி நீ சொல்வாயென
ஊர் மக்கள் இங்கே உன்வரவை பார்த்து
உறங்காமல் உண்ணாமல் கிடந்தார்கள்..
உன்வரவால் இப்போ உவகை கொண்டுள்ளார்கள் -நீ
உன் உள்ளத்தில் உள்ளதை உன் குரலால்
உன் ஊரவர்க்கு உரைத்திடுவாயோ..!!!!
நன்றி.. வண்ணக்கிளி..!
Athirady
0 விமர்சனங்கள்:
Post a Comment