ஆன்மீகமா, அரசியலா... கோடிட்டு காட்டும் ரஜினி!
சமீபத்தில் 'நடந்தது என்ன?' என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பாபா குகைப் பயண அனுபவங்கள் பெருமளவு மக்களால் பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ரஜினி இந்தப் பயணத்தை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதி நாளன்று பாபா ஆஸ்ரமத்தில் அவர் யோகா தீட்சை பெறும் வீடியோவையும் காட்டினர்.
இந்த வீடியோ இதுவரை யாரும் பார்க்காதது. ரஜினியே விஜய் டிவிக்கு கொடுத்தது இது என்றும் கூறப்பட்டது (இந்த வீடியோ மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை மறு ஒளிபரப்பாகியுள்ளது.)
இதுகுறித்து இப்படிக் கூறுகிறார்கள்:
"ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த நிலையை தெளிவுப்படுத்ததான் இந்த நிகழ்ச்சி என்கிறது ரஜினி தரப்பு. ஆன்மிகமா? அரசியலா? என்பதற்கு ரசிகர்களே விடை தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகதான், ரஜினியே தனது இமயமலை பயணக் காட்சிகளை விஜய் டி.வி. நிர்வாகத்துக்கு கொடுத்து உதவியிருக்கிறார் என்கிறது ரஜினி வட்டாரம்...".
அரசியலா ஆன்மீகமா... ரஜினி அடிக்கடி போடும் குழப்பப் புதிருக்கு அவரே ஒரு மறைமுக விடையைக் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ரசிகர்கள்தான் விளக்கம் தர வேண்டும.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment