தன்மானகத் தமிழ்க் கட்சிகளும் அந்நநடைபயில்கின்றனர்…
வணக்கம் தமிழ் உறவுகளே வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!!
சில இணையங்கள் பேசுவதற்கு வார்த்தையில்லாமலும், எழுதுவதற்கு விடயம் இல்லாமலும் தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் சுதந்திரத்தைத் தடைசெய்யப் பார்க்கின்றனர். இதற்கு மண்டையிலும் தொண்டையிலும் தாங்களே தங்களை அடித்தும் கொள்கின்றனர்.
இன்று சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் தமிழ் அமைப்புக்களும் தமிழர்களும் சேர்கின்றார்கள் என்றால் அது அம்மானின் சிறப்பான அடிகளே என்பதனை யாரும் மறுக்கமுடியாத உண்மைகள். இன்றுமட்டுமல்ல தமிழர்கள் ஒரு இடத்தில் போகமாட்டார்கள், ஆனால் இன்னௌhரு தமிழன் போய்விட்டான் என்றால் அவனைக் குழப்புவதற்காகவே, சதிவலைகள் செய்வதற்காகவே அந்த இடத்திற்குப் போவார்கள்….
ஒரு இடத்தில் பல தலைமைகளை உருவாக்குவதில் எம் தமிழர்கள் “முதலை நீருக்களிருந்து தலையைத்தூக்குவது போல்” கிளம்பிவிடுவார்கள். இப்போது அம்மானின் தலைமையே போதுமானது. அவரின் வழியில் மட்டுமே தமிழர்களுக்கு விடிவு நோக்கிய பாதையில் தெளிவு தெரியமுடியும் என்பதில் சந்தேகமில்லை. இதனை முன்னைய வி.பு. தலைவரே நன்கு அறிந்தவர் இதற்கு அவரின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மிகுந்த சாட்சியம் பகரக்கூடியவர். தமிழர்களின் துர்அதிஸ்டம் அவர் உயிருடன் இல்லை என்றாலும், கடந்த கால பேச்சுக்களில் அம்மான் ஈடுபட்ட போது அதற்கான வழிகள் இருந்ததனை அவரே ஒப்புக்கொண்டார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதிலும் பார்க்க அம்மானின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இயங்கவேண்டும் என்பதே தமிழர்களுக்கு மிகச்சிறப்பு. தமிழர்களுக்கு ஒரு தலைமை வேண்டும், அது பலமுள்ள தலைமையாக இருக்கவேண்டும். “பிச்சை போடப்பட்ட மற்றவரின் பதவியில் இருந்து கொண்டு” தனது அடியாட்களை வைத்து வீரசாகசம் காட்டுவோரை நம்பி எப்படி தலைமைகளை ஒப்படைபக்பது. ஒரு தலைமையின் முடிவுகள் நிலையாகவும் நிரந்தரமானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும். அதன்மூலம், அம்மக்களுக்கான நிரந்தர சமாதானம் கிடைக்க வழிவர வேண்டுமேயொழிய எரிந்து அழியும் மெழுகுவர்த்தியாக இருக்கக்கூடாது. நித்தம் விடியும் கதிரவனாக மலர வேண்டும்.
அவ்வாறான விடிவு அம்மானின் வழியில் இருப்பதைக்கண்ட “பழைய குரடிகள்” கதவைத் திறப்பதற்கு முன்னைய அம்மானின் நடவடிக்கைகளைக் கிளறி கூத்தடிக்கப்பார்ப்பது, “தமிழ்விண்” போன்ற இணையங்கள் கங்கணம் கட்டப்பார்க்கின்றனர்.
இறுதிக்கட்டப்போரின்போது, புலிகளுக்கு ஆதரவாக புலத்தில் மக்களைக் கோசம் போடவைத்தனர். அதற்கு, வன்னியில் “மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்” என்ற கருவியைப் பயன்படுத்தினர். பின்பு போர் முடிந்ததும் மக்கள் ஓய்ந்துவிட்டனர் என்பதனை அறிந்து, இடைத்தங்கள் முகாம்களில் பாதுகாக்கப்பட்ட மக்களைப்பற்றிய பல்லவியை தொடர்ந்தனர். அதுகூட இயலாக்கட்டத்தில் போகும்போது, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்ற வரிச்சலுகையினைப்பற்றிய தொல்லைகளைக் கொடுக்கின்றனர்… இவற்றை எதிர்க்கட்சியினர் செய்வார்களே ஏன் இவர்கள் எதிர்கட்சியின் வேலையினைச் செய்கின்றார்கள்??? இதற்குப்பாதிலாக, புலிகளின் பிடியில் இருந்து அனைத்தையும் இழந்த மக்களுக்கு ஏன் உதவுவதற்கு முழுமூச்சாக இருந்து பணிபுரியக்கூடாது, ஏன் அரசிற்கு ஒத்துளைப்பு கொடுத்து எமது உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வரக்கூடாது???
இத்தனை காலமும் மேற்கொண்ட போராட்ட வழி தவறு என்பதனை புரிந்தும் அதனைக்கைவிட முன்வருவதிலும் பார்க்க, மக்களுக்காக பாடுபடுவோரைக் குழப்புவதில் சேர்க்கப்பட்ட நிதியை செலவு செய்கின்றனர். ஆங்காங்கே தங்கியிருக்கும் நிதியை முடக்குவதில் இரகசியத்தைப் பேணுகின்றனர். அரசின் புலனாய்வு இதனை இன்னும் கிளற முன்வராத பட்சத்தில் அவர்களுக்கு இன்பமே இல்லாவிட்டால் ????!!!
இப்போது மக்களுக்கு நன்கு புரிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து மீழ கொஞ்சம் சிரமமாக இருக்கின்றது. ஏனென்றால் புலிகளின் வால்பிடிகள் புலத்து இன்னமும் பலவிடயத்தை மக்கள் மத்தியில் மறைத்து, அம்மானின் சிறப்புகளுக்கெதிராக வதந்திகளை கிளப்பப்பார்க்கின்றனர். அந்த குட்டுகள் உடையவே கீழே விழுந்த முட்டையாவார்கள் அந்தக்காலம் விரைந்து கொண்டிருக்கின்றது.
– தொடரும் புலத்தான்.
தென்றல் இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment