கிழக்கு மாகான முதல் அமைச்சருக்கு முகத்தில் பூசப்பட்ட வர்ணக்கரிப் பூச்சு…
கிழக்கு மாகான முதல்அமைச்சரை, அமைச்சர் சந்திரகாந்தனாக நினைக்காது பிள்ளையானாக நினைத்த காரணத்தால்தான் இந்திய அரசின் தூதுக்குழுவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து பிள்ளையானுக்குத்தெரிய வேண்டிய விடயம் என்னவென்றால் கிடைத்த பதவி தன்னுடையதல்ல, தான் வெறும் விளையாட்டுப்பொம்மையே! தனது பதவிக்குரிய மனிதன் என்றுமே அம்மான் அவர்களே என்பதனை.
வந்த தூதுக்குழு, கூட்டணியினரைச் சந்தித்தது, அமைச்சர் டக்ளசையும் சந்தித்தது, ஏன் முதல் அமைச்சராக இருப்பவரை சந்திக்கவில்லை!!!! ??? எல்லாத்திட்டங்களையும் கிழக்குமாகானத்தில் ஏற்பாடுசெய்தும் இறுதியில் கைவிடப்பட்டதற்குக்காரணம்தான்என்ன???
அவரை இன்னும் எந்தக்கண்கொண்டு சமூகம் பார்க்கின்றது என்பதனை அவர் முதலில் உணரவேண்டும். ஒரு தலைமைக்குள் அவர் இருந்திருந்தால், முதல் சந்திப்பு அத்தலைமைக்கே கிடைத்திருக்கும். அதைவிடுத்து தன்னிச்சையாக இயங்கிவருவதுடன், தகாத செயல்களையும் அப்பதவியை வைத்து மேற்கொண்டுவருவது இத்தோடு நிறுத்தப்பட்டு, அம்மானின் தலைமையில் மீண்டும் தனது பாதையினைச் செம்மைப்படுத்த அவர் முன்வராவிட்டால், மக்கள் அவருக்கு தக்க பதிலை வழங்குவார்கள் என்பது நிச்சயம்.
முட்டைக்குள் வாழ்ந்தால் குஞ்சுக்கு முட்டைதான் மிகப்பெரிய உலகம். கிணற்றுத்தவளையாக வாழாது, உலகின் அரசியலையும் நாட்டுநடப்புகளையும் கருத்தில் கொண்டுதான் உள்@ர் அரசியலும் ஆடவேண்டும். சாதாரண எம்பிக்கள் அறிந்திருக்கும் அரசியலைக்கூட அறிந்துகொள்ளாமல் எப்படி முதல் அமைச்சினை நடாத்தமுடியும். முதல் அமைச்சர் இல்லாவிட்டாலும், அமைச்சின் செயற்பாடுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால் சரியான ஆலோசனையுடைய அமைச்சைக்கொண்டால்தான் அரசு வல்லரசாக முடியும். அந்தத்தகுதி பிள்ளையானுக்கு இருக்கின்றதா என்ற வினா தற்போது எழுகின்றதோடு, மக்கள் மத்தியில் விரக்கியும் புகையாகக்கிழம்புகின்றது.
ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பார்கள், நாட்டில் தமிழர்களின் நிலையினை அறிய வந்த தூதுக்குழு ஒரு தமிழ் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், உள்நாட்டில் எவ்வாறு அவ் முதல் அமைச்சர் தனது ஆதிக்கத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்கமுடியும். சுhதாரணமாக அரசினைச் சந்திக்கவந்திருந்தால், ஒருவேளை இச்செயற்பாடு மக்களை துருவாமல் சென்றிருக்கும். ஆனால் தமிழர்களின் நிலவரத்தை அறிய வரும் தூதுக்குழுவில் முதல் அமைச்சரின் பங்கே இல்லை என்றால் இதன் கருத்து என்ன வென்பது அரசியல் அறிவில்லாத நபர்கூட நன்கு புரிந்து கொள்ளகூடியது.
தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு பலர் மிரட்டல், கொள்ளை, கொலை, கடத்தல், மொட்டைக்கடதாசி, போன்று பல்வேறு சட்டத்திற்குப்புறம்பான செயல்களில் ஈடுபடுவதுதொடர்பான பல தகவல்கள் இணையங்களில் ஏலவே போதியளவு வந்தேறியது. இன்னும் அவர்கள் நிலைத்திருக்கின்றார்கள் என்றால் தமது பதவியைப்பயன்படுத்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து மூடி மறைக்கப்பார்க்கின்றமையே. இது இப்படி இருக்க, அவர்களால் எப்படி தமிழர்களுக்கு அப்பதவியினால் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்?
தமிழர்கள் அன்றன்றுள்ள அரசியலினை நன்கு மனதில் பதித்து, வருகின்ற காலங்களில் யார் மக்களின் பிரதிநிதி யாருக்கு தக்க தலைமை இருக்கின்றது என்பதனை நிர்ணயிக்க வேண்டும்.
தென்றல் இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment