இலங்கைக்கு அரசு சார்பில் எம்.பி.க்கள் அனுப்பப்படவில்லை:கருணாநிதி
''இலங்கைக்கு அரசு சார்பில் குழு அனுப்பப்படவில்லை ''என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு, இலங்கை சென்றிருப்பதை கபட நாடகம் என்று ஒரு நடிகர் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஏன் இடம்பெறவில்லை என்று பழ.நெடுமாறன் கேட்டிருக்கிறார். அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை ஏன் பிரதமர் கூட்டவில்லை என்றும், வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் ஏன் அதில் உடன் செல்லவில்லை என்றும் என்.வரதராஜன் கேள்வி கேட்டிருக்கிறார்...''நாடாளுமன்றஉறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அனுப்ப வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது. இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவிலே அனுப்பப்பட்ட குழு அல்ல.
அரசு சார்பில் குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும். இப்போது செல்லும் குழுவிலே உள்ள உறுப்பினர்களுக்கான விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக் கூட அந்தந்த கட்சிகள் தான் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், எது நடந்தாலும், குறை காண்பது சிலரது வழக்கம்''என்று தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தேனாலி
0 விமர்சனங்கள்:
Post a Comment