போலி கடவுச்சீட்டில் பெண்புலிகளை கடத்தியவர் கைது!
இடைத்தங்கல் முகாமில் மக்களுடன் மக்களாக ஒளிந்திருக்கும் பெண்புலிகளுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு உதவியவர் வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள பெண்புலிகளுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி அவர்களை கடத்திவந்த பெண்ணொருவரையும் அவரது புதல்வரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் கைதடி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த செல்வதுரை மகேஸ்வரி என்ற புலி உறுப்பினரே ஆவர் என்றும், இவர் வத்தளை பகுதியில் வசித்துவந்தவர் ஆவர். இவரால் பல பெண்புலிகள் போலி கடவுச்சீட்டு மூலம் முகாமில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலிகளை காப்பாற்றி பணம் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பாக நெருப்பு முன்னர் பலமுறை சுட்டிகாட்யிருந்தது குறிப்பிட்டிருந்தது.
இவ் நடவடிக்கை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள் சிலரால் ஒர் தொழிலாகவே நடாத்தப்பட்டு வருவதாகவும் மூன்று இலட்சம் ரூபாயில் இருந்து பத்து இலட்சம் ரூபாவரை பேரம்பேசப்பட்டே புலிகள் காப்பாற்றப்படுகின்றனர். அண்மையில் வெளியான செய்தி ஒன்றின் பிரகாரம் அமைச்சர் ஒருவர் இவ்வாறு புலிகளை காப்பாற்றி 200 கோடி ரூபாவரை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை அரசு கட்டுப்படுத்த தவறினால் மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கே வழிவகுக்கும் என்பதை அரசு புரிந்து முகாம்களில் உள்ள புலிகள் காப்பாற்றப்படுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு தப்பியோடும் புலிகள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்ப+ர், இந்தியா போன்ற நாடுகளில் ஒண்றினைந்து வருகின்றனர் எனவும் தன்னை அடையாளம் காட்டிகொள்ள விரும்பாத படையதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment