இடம்பெயர் முகாம்கள் குறித்து தமிழகக் குழு பாராட்டு
இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளைத் தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில் தெரிவித்ததாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில்,
"தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர்.
அதிபர் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.
மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment