பதவிக்காக இருகரம்பற்றி மகிந்தவிற்கு நன்றிகூறிய யாழ் மாநகர முதல்வர்
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.அத்துடன், யாழ். மாநகரசபையின் பிரதி முதல் வராகக் துரைராசா இளங்கோவும் தெரிவான ஏனைய உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
யாழ். மாநகரசபையின் முதல்வராகத்தாம் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் தமது சத்தியப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை அதன்போது திருமதி பற்குணராசா யோகேஸ்வரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தவை வருமாறு:
எமது சகோதர இனமான முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம், சிலாபம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இருப்பினும் கடந்த யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமது பங்களிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர்.
இதனால், உதவி மேயர் பதவியை தங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் பதவியேற்பு வைபவம் காலதாமதமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பேரில் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்களுக்கு உதவி மேயர் பதவி வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ஒன்று நாங்கள் போட்டியிட்ட ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த முன்னிலையில் கைச்சாத்தாகியுள்ளது. இதன் காரணமாகவே பதவியேற்பு வைபவம் கால தாமதமானது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment