நடிகர் சங்க கண்டனக் கூட்டம்-வருவார்களா ரஜினி, கமல்?
புவனேஸ்வரி விபச்சாரம் செய்து சிக்கியதைத் தொடர்ந்து அவர் கூறிய வாக்குமூலத்தை ஊடகங்கள் வெளியிட்டன. அதில், நான் மட்டுமா விபச்சாரம் செய்கிறேன், பெரிய பெரிய நடிகைகள் எல்லாம்தான் செய்கிறார்கள் என்று கூறி ஒரு பெரிய பட்டியலையே தன்னைக் கைது செய்து அதிகாரிகளிடம் வெளியிட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தைக் கூட்டி முழங்கியது. பின்னர் போலீஸ் கமிஷனரையும் நேரில் பார்த்து முறையிட்டனர்.
முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து அவர்கள் உதவி கோர முயன்றனர். ஆனால் முதல்வர் இந்த விஷயத்தில் நடிகர் சங்கப் பிரதிநிதிகளை பார்க்கவே மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விஷயத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில், விபச்சாரம் செய்யும் நடிகைகள் பட்டியலை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நாளிதழைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் நடிகர், நடிகைகள்.
தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க காம்பவுண்டுக்குள்ளேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள, சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
சக கலைஞர்களின் மானம் காக்க, நமது சங்கத்தின் ஒற்றுமையை பறை சாற்ற அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பதாக சங்கத் தலைவர் சரத்குமாரும், பொதுச் செயலாளர் ராதாரவியும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் கூறப்பட்டது.
குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களும் போட்டது போட்டபடியே வந்து கலந்து கொள்ள வேண்டும். யாரும் வராமல் இருக்கக் கூடாது என்றும் கண்டிப்புடன் கூறப்பட்டதாம். இவர்களை எப்படியாவது இந்த விவகாரத்தில் இழுத்துவிட வேண்டும் என்பதற்காகவே இன்று அக்டோபர் 7ம் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது திரைத்துறை சங்கங்கள்.
இருப்பினும், ரஜினிகாந்த் தும், கமல்ஹாசனும் வருவார்களா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் நிறைய வந்தபோதும்கூட அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் போனவர் ரஜினி. ரசிகர் மன்ற சந்திப்பில் கூட, "பத்திரிகைகள் குறை சொல்லும் அளவுக்குதானே சமயத்தில் நமது செயல்பாடுகளும் அமைந்துவிடுகின்றன" என்று சொன்னதோடு, பத்திரிகைகள் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள். நமக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்தால் உரிய வழியில் அதை மறுக்க வேண்டும் என்று கூறியவர் ரஜினி.
எனவே, இந்த போராட்டத்துக்கு அவர் வருவாரா... பார்க்கலாம்!
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment