ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - புவனேஸ்வரி மீண்டும் மனு தாக்கல்
அடையாறு பகுதியில் உள்ள பங்களாவில் வைத்து விபச்சாரம் செய்ததாக பிடிபட்டுள்ளார் புவனேஸ்வரி. அவருடன் இரண்டு அழகிகள் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி.
அந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் புவனேஸ்வரிக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் ஜெயரத்னகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில்,
நடிகை புவனேஸ்வரி 2002-ம் ஆண்டு விபசார வழக்கில் கைதாகி விடுதலை ஆனவர். மேலும் இவர் வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் செய்து உள்ளார். இவருக்கு சென்னை யில் நிரந்தர முகவரியும் கிடையாது. எனவே ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். இதைத் தொடர்ந்து புவனேஸ்வரி சார்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment