தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, பலநூறு வருடங்களின்முன் தமிழன்சொன்ன பொன்மொழி
புலம்பெயர் நாடுகளில் புதையல் கொட்டினாலும்கூட திருடுவது தமிழர்கள் ஒருசாராரின் கைவந்த கலையாகிவிட்டது. தாயகத்திலே வாழமுடியாது, சிங்களவன் உரிமைதர மறுக்கின்றான், சிங்கள இரணுவம் எங்களைக் கொல்கின்றது எனக் கூச்சலிட்டு புலம்பெயர் நாடுகளில் புகலிடம்பெற்ற இந்த திருட்டுத் தமிழர்கள் தமக்கு அபயமளித்த நாடுகளின் பூர்வீகக்குடிமக்களின் சொத்துக்களை திருடுவதில் கைதேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன? என்னும் முது மொழிக்கமைய இவர்களை விண்வெளிக்கு அனுப்பினாலம்கூட அங்கும் திருடுவார்களே உழைப்பில் திருப்தியடையமாட்டார்கள்.
இந்நிலையில் பிரித்தானியாவிலும், கனடாவிலும் வாழும் தமிழர்களில் ஒருசாராரே இவ்விடயத்தில் முன்னணி வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி குழுவினரில் ஒருசாரார் கடனட்டை மோசடி தொடர்பில் பேங்கொக்கில் கடந்த திங்கட்கிழமை தாய். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவப்பிரியன் சிவபாக்கியராஜா, அழகப்பன் பாலேந்திரன் மற்றும் வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பேங்கொக்கின் சுக்ஹம்விட் சோய் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் 104 இலத்திரனியல் அட்டைகளும், காந்தபுலன் உணரி((magnetic card-strip reader) ஒன்றும் இரண்டு ((lap-top )மடி கணினிகளும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.அவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அவர்கள் தாய்லாந்தைத் தளமாக பயன்படுத்தி சர்வதேச கடனட்டை மோசடிகளில் ஈடுபட்டுவரும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச வங்கி கணக்குகளை கொண்டிருக்கும் ஐரோப்பிய மற்றும் கனடிய வாடிக்கையாளர்களின் கடனட்டை தகவல்களை பெற்று அவற்றை போலி கடனட்டைகளுக்கு பிரதி செய்து இவர்கள் மோசடிகளில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
மஹாவலி
0 விமர்சனங்கள்:
Post a Comment