இன்றைய யாழ்ப்பாணம் - ஒரு பார்வை
யாழ். குடாநாட்டின் தரைவழி நுழைவாயிலான ஏ-9 இல் போக்குவரத்துக்கள் நடைபெறுகின்ற நிலையில் குடா நாட்டின் சிவில் நிர்வாகத்தில் சுமுக நிலை ஏற்பட்டிருக்கிறது.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவடைந்து ஒருசில மாதங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமுக நிலையும் சகஜ வாழ்வும் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
“இராணுவத் தலையீடோ வேறெந்த தலையீடோ இல்லாது முழுமையான சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிகிறது” இவ்வாறு கூறுகிறார் அரசாங்க அதிபர் கே. கணேஷ்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைமையை கண்டறிய நாம் அங்கு சென்றிருந்தோம்.
குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சுற்றிப்பார்த்த போது, மக்கள் அச்சமின்றி நிம்மதிப் பெரு மூச்சுடன் அன்றாட வாழ்வில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது.
(ஒருசில வீதிகளைத் தவிர) வீதித் தடைகள், காவலரண்கள் அகற்றப்பட்டு போக்குவரத்துக் காகத் திறக்கப்பட்டிருக்கின்றன. பலாலியை அண்டிய அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மாறுபட்ட நிலை இருந்தாலும், அங்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னோடியாக, அதியுயர் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள சூனியப் பிரதே சத்தில் அடுத்த மாதம் மக்கள் மீள் குடியேற்றப்படவுள்ளனர்.
தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளில் முதலில் 882 குடும்பங்கள் சொந்த இடங்களில் (சூனியப் பிரதேச த்தில்) குடியமர்தப்படுவார்களென அரச அதிபர் கூறினார்.
யாழ். குடாவில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 435 கிராம சேவகர் பிரிவுகளும் செயற்படுகின்றன. இங்கெல்லாம் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாக இருந்தாலும் எவ்வித மான கெடுபிடிகளையும் அங்கு காண முடியவில்லை. சிறியரக ஆயுதங்களை ஏந்தியவாறு இராணுவத்தினர் காணப்படுகின்றனர்.
பெரும்பாலான இராணுவத்தினர் ஆயுதமின்றி சைக்கிள்களிலும் நடையாகவும் திரிவதைக் காணமுடிகிறது.
பொருட்கள் கொழும்பு விலைகளில் பொருட்களைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. பால் மா பக்கெட்டுகளின் விலை, அதில் குறித்த விலையையும் விட 10 ரூபா குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது. சகல பிரதேசத்திலும் இதே விலையில் பால் மாக்களைப் பெறக் கூடியதாக இருக்கிறது.
அதாவது, கொழும்பை விடவும் 10 ருபா விலை குறைவாகவே பெற முடிகிறது. குளிர்பானங்கள், சவர்க்காரங்கள், சொக்கலேட்டுகள், சீனி உட்பட முக்கிய பொருட்களைக் குறித்த விலையிலேயே பெறமுடிகிறது.
என்றாலும், யாழ். குடாநாட்டு (உள்ளூர்) உற்பத்திப் பொருட்க ளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு என்றே கருதலாம்.
குடாநாட்டிலிருந்து உற்பத்திப் பொருட்கள் தென் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதே இந்த அதிகரிப்புக்குக் காரணமாகும்.
“நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் குடாநாட்டு உற்பத்திப் பொருட்களுக்குப்பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி யாக இருப்பதோடு, உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார். யாழ். மீனவர் சங்கத்தலைவர் தவரெட்ணம்.
யாழ். பனை உற்பத்திப் பொருட்களுக்கு இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் பெரும் மவுசு. ஏ-9 ஊடாக பொருட்கள் கொண்டு செல்லப் படுவதினால் குடா நாட்டில் அதன் விலைகள் அதிகரித்துள்ள தோடு தட்டுப்பாடு நிலவுவதை யும் காண முடிகிறது.
ஒரு கிலோ 75/= வுக்கு விற்பனை செய்யப்பட்ட புளுக்கொடியல் யாழ். நகரில் 240/- 250/= ரூபாவு க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென் பகுதியிலிருந்து தினமும் ஏ-9 ஊடாகப் பொருட்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், ஒரு விடயத்தை எங்களால் அவதானிக்க முடிந்தது.
முன்னரெல்லாம் லொறிகளிலேயே பொருட்கள் கொண்டுவரப் பட்டன. இப்போது பெரிய பெரிய கொள்கலன்களிலேயே பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.
யாழ்ப்பாண வீதிகளில் கொள் கலன்கள் (விontainலீrs) நிறுத்தப் பட்டவாறே காணப்படுகின்றன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
“யாழ். மக்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்க ளது நுகர்ச்சித்தன்மையும், தரமான பொருட்களைத் தேடி அவர்கள் கொள்வளவு செய்யும் திறனும் எவ்விதத்திலும் பாதிக்கப்பட வில்லை” என்றார் சர்வதேச வர்த்தக நிறுவனமொன்றின் யாழ். முகாமையாளர் சதீஸ்ராஜ்.
“யாழ். குடாநாட்டு கடல் வலையத் தடை முற்றாக அகற்றப்பட்ட பின்னர் மீனவர்கள் வாழ் விலும் சுபீட்சம் ஏற்பட்டிருப்பதாக மீனவர் சங்கப் பிரதிநிதி கூறினார்.
தற்போது மீன் உற்பத்தி 5000 மெற்றிக் தொன்னிலிருந்த 6000 மெற்றிக் தொன்னாக அதிகரித் திருப்பதாகக் கூறிய அதன் தலைவர் ஒரு சில பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்று சுட்டிக்காட்டினார்.
ஊரடங்கு
யாழ். குடாநாட்டு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை அமுல் படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் 11 மணிக்குப் பின்பும் மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். அந்த நேரத்திலும் கெடுபிடிகள் இன்றி மக்கள் சென்றுவர அனுமதிக்கப் படுவதை காண முடிந்தது.
வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ். குடாநாட்டைச் சேர்ந்தோர் குடாநாட்டுக்கு அனு ப்பப்பட்டு வருகின்றனர். 44 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற் றும் செயற்பாடு ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
இவர்கள் தினமும் பஸ்களில் ஏற்றப்பட்டுக் கொண்டு வரப்பட்ட வண்ணமே இருக்கி ன்றனர். அதற்கான முன்னோடித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். நகரில் தங்கி யிருந்து கவனித்து வருகின்றார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா; “யாழ் குடாநாட்டு மக்கள் இப்பொழுது இருக்கும் நிலையை விடவும் மேலும் சகஜ நிலைக்கு திரும்புவர் “எங்கள் தேசம் எங்கள் அரசு” என்ற கொள்கையில் இருந்து நாம் செயற்பட்டக் கொண்டிருக் கிறோம்” எனக் கூறினார்.
மீளக்குடியமரும் முகாம் மக்களின் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டுவருகிறதெனவும் அவர் விளக்கினார்.
என்றாலும், யாழ். குடாநாட்டு மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. பூரண சகஜ நிலையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
-தினகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment