இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இலங்கைக்கு வருகை தந்த கனிமொழிக்கு நன்றி
23.07.09 அன்று, சென்னiயில் உள்ள உங்கள் காரியாலயத்தில் வைத்து எங்களைச்சந்தித்தபோது, இலங்கையில் இன்று இடம் பெயர்க்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையை நீங்கள் நேரில் வந்து பார்த்து, வன்னி அகதி முகாம்களில் அவலப்படும் எங்கள் தமிழ் மக்களுக்கான உதவிகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் (டாக்டர் நடேசன், திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) உங்களிடம் வேணடிக் கொண்டதை அனுதாபத்துடன் செவி மடுத்துக கேட்டதுமல்லாமல்; கூடிய விரைவில் இலங்கை வந்து எங்கள் மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் எங்களின் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களின் இலங்கைக்கான வருகைக்கு ஆவன செய்து உங்கள் வருகையைச் செம்மையாக நெறிப்படுத்திய உலகம் பரந்த தமிழர்களின் தலைவரும், உங்களின் அன்புத் தந்தையும தமிழகத்தின் மதிப்புக்குரிய முதல்வருமான மாண்புக்குரிய திரு மு.கருணாநிதி அவர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களைச் சந்தித்தபோது, இலங்கையில் எங்கள் தமிழ் மக்களின் சோகமான அரசியல், பொருளாதார சமுதாய நிலைகளை உங்களிடம் விவரித்தோம். அங்கே, வன்னி முகாம்களில் எங்கள் தமிழ் மக்கள் பலர் பிளாஸ்டிக் கூடாரங்களில் படும் துயரையும் உங்களுக்கு எடுத்துச்சொன்னோம்.
உங்கள் வருகையைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய போரின் காரணமாகத் தங்கள் குடிமனைகளிலிருந்து வன்னிக்கு இடம் பெயர்க்கப்பட்டு வைத்திருக்கும் மக்களுக்கு உதவி செய்ய இந்தியா எடுக்கும் உடனடி நடவடிக்கைகள் இடம் பெயர்ந்த மக்களின் அக்கறை கொண்ட அத்தனைபேரையும் திருப்பதிப் படுத்தியிருக்கிறது.
உங்களைச் சந்திக்க முன்னர், நாங்கள் இரு தடவைகள் (மாசி மாதம், ஆடிமாதம் 2009) இடம் பெயர்ந்த மக்களின் நிலையைக் கண்டறிய வன்னிக்குச் சென்றோம். அங்குள்ள அரச அதிபர் மட்டுமல்லாது இராணுவ அதிகாரியிடமும் தமிழ் மக்களைப் பருவ மழைக்கு முதல் அவரவர் இடங்களுக்கு அனுப்புவது பற்றி அழுத்திச்சொன்னோம். ஆனாலும் அரசாங்கமும் அதிகாரிகளும் எங்கள் கோரிக்கையை உடனடியாக முன்னெடு;ப்பார்களா, கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்களை மீழ் குடியேற்றம் செய்யும் பொருளாதார வசதி அவர்களிடம இருக்கிறதா? இந்த மீழ் குடியேற்றம் நடக்க யார் யார் உதவி செய்வார்கள் என்று தவித்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் வன்னிக்குச்; சென்ற போது, அங்கு இருந்தவர்களில் கணிசமான தொகையினர் 1977ம் ஆண்டு இனக்; கலவரத்தில் மலையகப் பகுதிகளிலிருந்து வன்னிக்கு ஓடிய இந்திய வம்சாவழி மக்களாகும். வன்னியல் இன்று இடம் பெயர்ந்தோர்களாக வாழும், அடுத்த கணிசமான தொகையினர், 2004ம் ஆண்டு, புலிகளுக்குள் நடந்த கருணா -பிரபாகரன் உட்சண்டையின்போது பிராபகரனுக்கு ஆதரவாகவிருந்த கிழக்குப் பகுதி மக்களாகும். இவர்களும் தங்களின் பூர்விகப் பகுதியிலிருந்த தங்கள் உடமைகளையும் விற்று விடடு வன்னியில் குடியேறியவர்களாகும். இவர்களுக்குத் திரும்பிப்போவதற்கு இடங்கள் கிடையாது. அதையடுத்த பெரிய பிரிவினர் வன்னிவாழ் விவசாயிகளாகும் அவர்களை மீழ் குடி யேற்றம் செய்யத் தாமதமானால் வன்னி மக்களின் தொழிலில் குந்தகம் நடக்கும், வாழ்வே கேள்விக் குறியீடாகவிருக்கும், இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீழ் குடியேற்றம் செய்யப் போதுமான பொருதார வசதி இலங்கை அரசாங்கத்தடம் கிடையாது; புலம் யெர்ந்த தமிழர்களோ இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு படி அரிசியையோ, ஒரு முழத் துணியையோ கொடுத்து உதவாமல், வெளிநாட்டு வீதிகளில் பெரிய கூட்டமாகச் சேர்ந்து இலங்கை அரசைக் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவின் தாராள உதவி இடம் பெயர்ந்திருக்கும் இலங்கைத் தழிழருக்கு உடனடியாகக் கிடைக்காவிட்டால் இந்த அபலை மக்களின் வாழ்வு பரிதாபமாகவிருக்கும் என்று கண்ணிருடன் உங்களை வேண்டிக்கொண்டோம். அனுதாபத்துடன் எங்களின் வேண்டுகோளைச் செவி மடுத்துக் கேட்டதுமல்லாமல் இன்று, அகதிகளாகப் பல விதங்களிலும் அவதிப் படும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவளிக்கும் தாயாகச் செயற்படும் உங்களுக்கு எங்களின் அன்பு கலந்த நன்றிகள் உரித்தாகட்டும்
இன்று உங்கள் நல் வருகையால் இடம் பெயர்ந்த மக்களின் மீழ்குடியேற்ற விடயங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கியிருக்கிறது.
'இன்று இலங்கையில் எங்கள் தமிழ் இனம் ஆள்மையுள்ள ஒரு அரசியற் தலைமையற்ற அகதிகளாக அல்லற்படுகிறார்கள், இலங்கையில் இன்று பல பகுதிகளிலும் ' தமிழ்த் தலைவர்களாக' இருப்பவர்கள் பலரும் இலங்கை அரசின் பாதுகாப்பு, பொருளாதார தயவுகளுடன் வாழ்வதால் இலங்கை அரசுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தட்டிக கேட்கும் வல்லமையற்றிருக்கிறார்கள். சுயமான தமிழத் தலைமைத்துவத்தின் வளர்ச்சியை புலிகளின் பயங்கரவாதம் அடக்கி ஒடுக்கி விட்டதால் இன்று தமிழ் மக்களும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலைவர்களும, புத்தி ஐpவிகளும்; அரசியல் பலமற்றவர்களாகத்தான் செயற் படுகிறார்கள். ஓரு முழுமையான ஜனநாயக வளர்ச்சி தமிழ்ப் பகுதிகளில் வளர்வதற்குத் தமிழ் மக்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் தேவை என்று உங்களைச் சந்தித்தபோது எடுத்துக்கூறினோம். உங்களின் வருகையால் இந்திய மத்திய அரசு இலங்கைக்கென்று ஒதுக்கிய குறிப்பிட்ட தொகையை விடக் கூடிய தொகையை இடம் பெயர்ந்த மக்களுக்காகக் கொடுத்திருக்கிறது.
இந்திய மத்திய அரசின் பல தரப்பட்ட அரசியல் பிரமுகர்களுடனும் இலங்கைக்கு வந்து தமிழர்கள் வாழும் பல பகுதிகளுக்கும் விடயம் செய்தது இலங்கைத் தமிழரின் அரசியலில் ஒரு சரித்திர மாற்றமாகும். இலங்கைக்க வருகை வந்த நீங்கள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் என்று பல இடங்களுக்கும் சென்று தமிழ்த் தலைவர்களையும் மக்களையும் சந்தித்திருக்கிறீர்கள், அத்துடன் கிழக்கு மாகாண முதல்வர் திரு சிவனேசன் சந்திரகாந்தனையும் கொழும்பில் சந்தித்ருக்கிறீர்கள்;. இவையெல்லாம் எங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பொருளாதார, அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்று நம்புகிறோம்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்று ஒரு முழமையான அரசியற் தீர்வு வருவதற்கு, தமிழகத் தலைவர்கள் எப்படி உதவி செய்வார்கள் என்ற கேள்வி பெரும்பாலான இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் உண்டு. இன்று, இடம் பெணர்ந்த மக்களின் மீழ்குடியேற்றம் பற்றிப் பேச வந்த நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் முழமையான அரசியல அதிகாரமு; கிடைக்கவும் உதவி செய்வீர்கள் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் கிடையாது.
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் உங்கள் உதவி எப்போதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நன்றி வணக்கம்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Theneeweb
0 விமர்சனங்கள்:
Post a Comment