புலிகளின் பெண் வைத்தியர் ஒருவர் கைது!
கிழக்கு மாகாணத்தில் புலிகள் அமைப்பில் கடமையாற்றிய பெண் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக இவர் புலிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சங்கவடிவேல் துயரதா எனப்படும் யாழ்நதி என்ற பெண் வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண் வைத்தியர் திருக்கோயில் மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் சேவையாற்றி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment