புலிகளுக்கு எதிரானதாக்குதல் நடவடிக்கைகள்பற்றி இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா நிருபர்களிடம் கூறியதாவது
விடுதலைப்புலிகளுடன் கடைசியாக 2 வருடம் 10 மாதம் நடந்த போரில் 22 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்றோம். 9 ஆயிரம் பேரை கைது செய்தோம். இதன்மூலம் விடுதலைப்புலிகளுக்கு 90 சதவீதம் இழப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு 70 சதவீத சொத்து இழப்பும் ஏற்படுத்தப்பட்டது. கடற்படை, வான்படை முற்றிலும் அழிக்கப்பட்டன.
ராணுவத்தை அதிரடியாக நவீனப்படுத்தியதாலும், அதிக அளவில் புதிய வீரர்களை சேர்த்ததாலும்தான் விடு தலைப்புலிகளை அழிக்க முடிந்தது. 3 ஆண்டில் மட்டும் ராணுவ பலம் 1 லட்சத்து 16 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. அனுபவம் உள்ள வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் புதிய வீரர்கள் விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். இது நல்ல பலனை கொடுத்தது.
இந்த போரில் 192 அதிகாரிகள் உள்பட 5.200 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். 27 ஆயிரம் வீரர்கள் காயம் அடைந்தனர். இறந்த ராணுவ வீரர்களில் 96 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இந்த போரில் ராணுவம் செய்த சாதனைக்கு வேறு எதுவும் ஈடாகாது. இவ்வாறு அவர் கூறினார்.
போர் பகுதியில் அரசு டாக்டராக பணியாற்றிய சண்முகராஜா, வரதராஜா, சத்தியமூர்த்தி, இளஞ்செழியன் ஆகியோர் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூறியதாக கைது செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் அவர்களுக்கு அரசு டாக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment