ஆணுறையை தேர்தல் சின்னமாக தாருங்கள்: அரியானா சுயேட்சை வேட்பாளர் கோரிக்கை
அரியானா மாநில சட்ட சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வேட்பாளர் தனக்கு தேர்தல் சின்னமாக ஆணுறை வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாதம் 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது அந்த மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.
கர்னல் தொகுதியில் ஆனந்த் பிரகாஷ்சர்மா என்ற சமூக சேவகர் சுயேட்சையாக போட்டியிட மனு செய்துள்ளார். அவர் தனக்கு தேர்தல் சின்னமாக ஆணுறை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அரியானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் "எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செக்ஸ் தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எனக்கு ஆணுறை சின்னம் தர வேண்டும். இதை இனி வேறு எந்த கட்சிக்கோ, சுயேட்சைக்கோ ஒதுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
வேட்பாளர் சர்மாவின் நூதனமான கோரிக்கையால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேறு ஏதாவது சின்னம் கேளுங்கள் என்று அனந்த் பிரகாஷ் சர்மாவை சமரசம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த சமரசத்தை சர்மா ஏற்கவில்லை. ஆணுறை சின்னம் கேட்டு வழக்கு தொடர அவர் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment