புவனேஸ்வரி புழல் சிறையில் அடைப்பு - மாட்டியது எப்படி?
சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்றே ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
'பாய்ஸ்', 'குண்டக்க மண்டக்க' போன்ற படங்களில் விபசார அழகியாக நடித்த நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
35 வயதாகும் இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். ஏற்கனவே விபசார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாகுமாரி, புவனா, சுருதி என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. தற்போது நிறைய தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். நிறைய நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் நடனமாடி வந்தார்.
அடுத்த கட்டமாக இவர் சமூக இயக்கம் ஒன்றையும் தொடங்க முயற்சி செய்து வந்தார். அதற்கு அரசியல்வாதிகள் சிலரது ஆசியும் இருந்தது.
சென்னை சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ, ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி வசித்து வருகிறார். அந்த வீட்டில் நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்வதாகவும், மேலும் அழகிகளை வைத்து விபசார தொழிலும் நடத்துவதாகவும் போலீசாருக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். உடனே அவரைப் பிடிக்க விபசார தடுப்பு போலீசார் ரகசிய திட்டம் போட்டனர்.
ஆந்திர தொழில் அதிபர் போல...
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடிகை புவனேஸ்வரியிடம் ஆந்திர தொழில் அதிபர் ஒருவர் பேசுவது போல செல்போனில் பேசினார்கள்.
ஆந்திர தொழில் அதிபர் என்பதால் புவனேஸ்வரி உல்லாசத்துக்கு சம்மதித்தார். 'ஒரு மணி நேரம் மட்டுமே என்னோடு இருக்க முடியும், அதற்கு ரூ.30 ஆயிரம் வேண்டும்' என்று பேரம் பேசினாராம். போலீசாரும் அதற்கு சம்மதித்து, போலீஸ்காரர் ஒருவரை தொழில் அதிபர் வேடத்தில் அனுப்பினார்கள்.
நேற்று பகல் 11 மணி அளவில் அந்த போலீஸ்காரர் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் வீட்டில் இருந்த புவனேஸ்வரி அன்போடு 'வாங்க, வாங்க' என்று தெலுங்கில் பேசி உபசரித்தார். தெலுங்கு தொழில் அதிபர் என்று நினைத்து இந்த உபசரிப்பை புவனேஸ்வரி வாரி வழங்கியுள்ளார். அவர் போலீஸ்காரர் என்பது அப்போது அவருக்கு தெரியாது.
நான் வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் கொடுங்கள், வேறு பெண் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் போதும் என்று வீட்டுக்குள் இருந்த மேலும் 2 பெண்களையும் காட்டினாராம்.
அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர், 'அந்த பெண்கள் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும்' என்று ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு தனி அறைக்கு அழைத்து சென்ற போது வெளியில் தயார் நிலையில் காத்து இருந்த தனிப்படை போலீசார் வீட்டு கதவை தட்டினார்கள்.
தலைவரை மீறி கைது செய்வீர்களா...
புவனேஸ்வரி வந்து கதவை திறந்தார். வெளியில் நின்ற போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர், தன் வீட்டுக்குள் மாட்டப்பட்டிருந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் படத்தைக் காட்டி "அவர்தான் என் தெய்வம், அவரை மீறி என்னை கைது செய்ய முடிந்தால் செய்து கொள்ளுங்கள்" என்று மிரட்டியுள்ளார். ஆனால் போலீசார், "உங்களை கைது செய்ய மாட்டோம், நீங்கள் என்று தெரியாமல்தான் வந்து விட்டோம், உங்களை விசாரணைக்கு பிறகு விட்டு விடுகிறோம்!" என்று சமாதானப்படுத்தினார்களாம்.
வீட்டில் இருந்த அஞ்சலி, டோலிசெட் என்ற மேலும் 2 மும்பை அழகிகளையும் போலீசார் பிடித்தனர். 3 பேரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு வழக்கமான விசாரணை முடிந்ததும் புவனேஸ்வரியைக் கைது செய்தனர். அவருடன் பிடிபட்ட மற்ற 2 பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
கைது செய்வதாக போலீசார் கூறியதும், புவனேஸ்வரி அழுதி அரற்றினாராம். என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே... என்று போலீசாரைப் பார்த்து சபித்தாராம்.
அவரது வாக்குமூலம்...
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் என் சொந்த ஊராகும். நான் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவள். பி.காம் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே எனது உறவினரான பாண்டியன் என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் என்னோடு நீண்ட நாள் வாழவில்லை. மகன் பிறந்தவுடன் பிரிந்து சென்று விட்டார்.
நான் கல்லூரியில் நாடகத்தில் நடித்துள்ளேன். நடனமும் நன்றாக ஆடுவேன். எனது நாடகத்தை பார்த்து சென்னையில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில் மாடலிங்காக நடிக்க வைத்தனர். ஊறுகாய் விளம்பரம் ஒன்றிலும் நடித்தேன்.
சினிமாவில் வாய்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் 2002-ம் ஆண்டு இதே போல் போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்து விட்டனர். அதனால் எனது சினிமா வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. பின்னர் நான் நிரபராதி என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
அதன்பிறகு 'பாய்ஸ்', 'குண்டக்க மண்டக்க' போன்ற படங்கள் எனக்கு மறுவாழ்வை கொடுத்தன. டி.வி சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனது வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை. எனது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
எத்தனையோ நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்...
என் வாழ்க்கையில் மட்டும்தான் இப்படி விதி விளையாடுகிறது. மீண்டும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் தவறு செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் போலீசார் நெருங்குவதில்லை. 2-வது முறையாக எனது வாழ்க்கையை நொறுக்கி விட்டார்கள். கடவுள் விட்ட வழி... இந்த முறையும் இருட்டில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்..." என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
3 சட்டப்பிரிவுகள்...
புவனேஸ்வரி மீது விபசார தடுப்பு சட்டம் பிரிவு 3/1, 4/1. 5/1 ஆகியவற்றின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. நேற்று மாலையில் புவனேஸ்வரியை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
அவரை படம்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படகாரர்கள் கூடி நின்றனர். ஆனால் யாருடைய காமிராவிலும் முகத்தை காட்டாமல் கறுப்பு துணியால் மூடியபடி புவனேஸ்வரி சென்று விட்டார்.
15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.
நடிகர் - புரோக்கர் கைது...
இதே போல சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த சதீஷ் (27) என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மாயா, கீதா என்ற 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
சதீஷ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரமெஷ் என்ற விபசார புரோக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment