'மணிக்கு ரூ 2 லட்சம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட் எங்கிட்ட இருக்கு!' - புவனேஸ்வரி பகீர்
விபச்சார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புவனேஸ்வரி தனது வாக்கு மூலத்தில் பல முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல முன்னணி நடிகைகள் விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறப்பதாகவும் அவர்கள் பெயர்கள் அடங்கிய லிஸ்டே தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
புவனேஸ்வரி போலீஸ் விசாரணையின் போது, "ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சம் வாங்கும் பல நடிகைகள் பட்டியல் என்னிடம் உள்ளது. அந்த பட்டியலை தருகிறேன். அவர்களையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் சும்மா விடமாட்டேன். வேண்டுமென்றால் இப்போதே தருகிறேன்... அவர்களையும் கைது செய்யுங்கள்" என்று போலீசாரை எச்சரித்தாராம்.
சரி கட்டாயம் பிடிக்கிறோம். லிஸ்டைக் கொடுங்க என்று போலீசாரும் கேட்டுள்ளனர்.
புவனேஸ்வரியை கைது செய்யாமல் சாதாரண வழக்கு போட்டு விடுவிக்கும்படி போலீசாருக்கு பல அரசியல் புள்ளிகள் சிபாரிசு செய்தனர். ஆனால் போலீசார் உறுதியாக செயல்பட்டு விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புவனேஸ்வரியின் கைது, பல்வேறு ரூபங்களில் திரையுலகில் உலாவரும் புரோக்கர்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு வயிற்றில் புளி கரைத்துள்ளதாம்.
புவனேஸ்வரி மூலமாக வெளிவரப் போகும் நடிகைகள் பட்டியல் குறித்து இப்போதே கோலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டதாம்.
புவனேஸ்வரியைக் கைது செய்த போலீஸார் இந்த நடிகைகளையும் பிடித்து உள்ளே போட்டால் நலமாக இருக்கும் என்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment