பாகிஸ்தான் இராணுவத்தின் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் "வீடியோ' காட்சி
பாகிஸ்தான் படையினரால் தலிபான் சந்தேக நபர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் 10 நிமிட "வீடியோ' காட்சியானது "பேஸ்புக்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவானது மேற்படி துஷ்பிரயோகம் தொடர்பான தலாவது தெளிவான சான்றாக உள்ளது.
இராணுவ உடையிலிருந்தவர்கள் சந்தேக நபர்களை அடித்து உதைக்கும் காட்சிகளை இந்த இணையத்தள வெளியீடு உள்ளடக்கியிருந்தது.
எனினும், இந்த வீடியோ காட்சி யாரால் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வீடியோ காட்சியில் இடம்பெற்ற உரையாடல்கள் அக்காட்சிகள் அண்மையில் எடுக்கப்பட்டவை என்பதற்கு சான்று பகர்வனவாக உள்ளன.
சுவாட் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையொன்றின் போது கைது செய்யப்பட்டவர்ளே இவ்வாறு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாகிஸ்தான் இராணுவ பொது விவகார பிரிவின் தலைவர் ஜெனரல் அதார் அப்பாஸ் விபக்கையில், ""இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டாகும். அந்த வீடியோ காட்சியை பரிசோதிக்காமல் என்னால் விமர்சனம் எதனையும் செய்ய டியாது. இது தொடர்பில் முடிவெடுக்க எமக்கு சிறிது காலம் தேவைப்படும்'' என்று கூறினார்.
இந்த வீடியோ காட்சியில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட தலிபான் சந்தேகநபர்கள் மத்தியில் வயது முதிர்ந்தவர்கள் பலரும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் ஒருவடமிருந்து திருப்திகரமான பதில்கள் கிடைக்காத நிலையில் இராணுவத்தினர் இடுப்புப் பட்டியாலும் முஷ்டியாலும் தாக்கியதுடன் அவரது உடல் ழுவதும் சப்பாத்து கால்களால் மிதிக்கும் காட்சி இதன்போது இராணுவ அதிகாயொருவர், ""உண்மையைக் கூறத் தவறினால் உனது கைகளையும் கால்களையும் வெட்ட நேரிடும்'' என அச்சுறுத்தல் விடுத்தார்.
இந்த வீடியோ காட்சி சுவாட் பள்ளத்தா க்கு இராணுவ நடவடிக்கைகளின் போது படையினர் சட்டத்துக்கு புறம்பான வகை யில் செயற்பட்டமைக்கு சான்று பகர்வதாக உள்ளதாக பாகிஸ்தானிய மனித உரிமைகள் ஆணையகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இது எதுவித ஆதார மற்ற குற்றச்சாட்டு என பாகிஸ்தான் இரா ணுவம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment