எங்களுக்கு அவல், பரமேஸ்வரனுக்கு பேகர், வன்னி புனிதர்களுக்கு !
யஹியா வாஸித்
அந்த கடைசி பத்து நாட்கள். மே 17 க்கு முந்தைய கடைசிப் பத்து நாட்கள். மொத்த தமிழ் பேசுபவனும், அவன் சிறிலங்கா தமிழனாக இருக்கட்டும், சிறிலங்கா தமிழ் பேசும் முஸ்லீமாக இருக்கட்டும், இந்திய தமிழனாக இருக்கட்டும், ஏன் லண்டன் வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்தை தாண்டிய அத்தனை உயிர்களும், அந்த உண்ணா நோன்பாளிக்காக, ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியதை நாம் அறிவோம், உலகமும் அறிந்ததே.
எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள வன்னித் தமிழர்களுக்காக, தூக்கம் மறந்து, உணவு மறந்து, உயிரை துறக்க சித்தமான அந்த பரமேஸ்வரன் என்ற புனிதனுக்காக, பாடசாலை மாணவ, மாணவிகள், இளையோர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், புத்திஜீவிகள், அங்கவீனர்கள், வயோதிபர்கள் என ஒரு மனிதப்பட்டாளம், இரவு பகல் பாராமல் வெஸ்மினிஸ்டர், சாரிங்குறொஸ், கிறீன் பார்க், சென் பீட்டர்ஸ், வாட்டர்லூ, லண்டன் பிறிஜ் போன்ற புகையிரத நிலையங்களில் அலைமோதியை நேற்று ( 07-10-2009 ) வரை நினைத்து புளகாங்கிதம் அடைந்தோமே.
இளையயோர்களே ! பார்த்தீர்களா உங்களுக்காக, நமது மண்ணுக்காக, அரசின் அட்டூளியங்களை உலகுக்கு பறை சாற்றுவதற்காக, அங்கு நம்மினப் பெண்களை சிங்கள இராணுவம் கற்பழித்துக் கொண்டிருப்பதை உலகுக்கு பறை சாற்றுவதற்றாக, ஒரு சகோதரன் உயிரை துச்சமென மதித்து சாகும் வரை உண்ணாமல் உண்ணா நோன்பிருக்கின்றான். என ஒரு தாய், பல தாய்மார், பல புத்திஜீவிகள் அந்த கடைசிப்பத்து நாட்களும், தீபம் ரீவியில் மைக்கை கையில் பிடித்துக்கொண்டு கதறிய கதறல் இன்னும் எங்கள் மனக்கண்ணைவிட்டு ஓட மறுக்கின்றதே !
மொத்த சோகத்தையும் ஒரு மக்டோனல் பேகரில் சிதறடித்து விட்டாயே நண்பனே. நண்பா ! நீ வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன், அங்கிருந்து இந்தியா வந்து, பல சிரமங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் அகதியானவன். உனக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, இங்கு நீ லண்டனில் லூசியம் என்ற இடத்தில் இருந்து கொண்டு வேண்டத்தகாத தொழில் செய்த நீர். உமக்கு இங்கு நிரந்தர இருப்பிடமே இல்லை. உனக்கு இந்த நாட்டில் குடியுரிமையும் கிடையாது. ஏற்கனவே நீர் இங்கு வேண்டத்தகாத தொழில்கள் விடயமாக செல்லமாக தேடப்படுபவர். லூசியம் காவல் நியைம், மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலும் உமக்கு நல்ல பெயர் இருக்கின்றது.
இவையனைத்தும் அனைவருக்கும் தெரிந்தும், வீரமறவனாகத்தான், அந்த புத்தி ஜீவிகள் உன்னை சாக்காட்ட துணிந்தனர். ஆனால் நீ எமனுக்கே பச்சடி கொடுத்துவிட்டு, துரியோதனர்களுக்கு கிச்சடி கொடுத்து, எங்களுக் கெல்லாம் அவலை அல்லவா வழங்கி விட்டாய்.
சகோதரா ! டெய்லி மெயில் காறனுக்கு எதிராகவும், ஸ்கொட்லான்ட் யார்ட் துப்பறிவாளர்களுக்கெதிராகவும் நீர் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் இன்னொரு பட்சி கூறுகின்றது. நல்லது. உலகுக்கே உலக நாகரிகம் சொல்லிக்கொடுத்த பிரிட்டிஷாருக்கு எதிராக வழக்குத் தாக்கல். ரொம்ப நல்லது. அரபு நாட்டவர்கள் தங்கள் கிணறுகளிலுள்ள எண்ணைய்யையே இவனைக் கேட்டுத்தான் தோண்டுகின்றார்கள், விற்கின்றார்கள். அந்த அளவுக்கு இவனது கண்கள் நீண்டு, பரந்து, உலகெல்லாம் விரிந்து கிடக்கின்றது. அவனது ஹெட் ஆபீஸிலிருந்து அறுநூறு அடி தூரத்தில் அமைந்துள்ள வெஸ்மினிஸ்டரில் ஜாலியாக இருந்து கொண்டு நீர் ஹம்பேகர் சாப்பிட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருந்திருப்பார்கள். சாக்கிரதை சகோதரா, குயீன்ஸ் எலிசபேத் ஹோள் ( நீர் உண்ணா விரதம் இருந்த இடத்துக்கு நூறடி தூரத்தில் இருக்கின்றது ) அருகில் போய், எங்கு கமரா பூட்டி இருப்பார்கள் என்று, ஆராய்ந்துவிட்டு வழக்கை தொடரு நண்பனே !
சகோதரா ! நீ ஏதோ எல்லோரையும் உசுப்பேத்தி விட்டுப் போய்விட்டாய். வெள்ளையன் அதற்கு 7.1 மில்லியன் கணக்கு சொல்கின்றான். அடேங்கப்பா 131 கோடி 35 லட்ச ரூபா. இதில் 10 வீதத்தை கொடுத்தாலே போதும், மகின்த சகோதரயா, அங்குள்ள மக்களுக்கு அழகான குடியிருப்பு வசதி செய்து கொடுத்து விடுவார்.
சகோதரா ! இன்றைய டெயிலி மெயிலை தூக்கிப் பார்த்தாயா ? 226 பேர் கொமண்ஸ் எழுதியிருக்கின்றார்கள். அதில் 90 வீதம் வெள்ளையன். நாக்கை பிடிங்கிச் சாகவேண்டும் போல் இருக்கின்றது நண்பா. நான் திங்கள் கிழமை வெஸ்மினிஸ்டரில் இறங்கித்தான் வேலைக்குப் போக வேண்டி இருக்கின்றது. பிளீஸ் தோழா ! மீண்டும் ஒரு முறை வெஸ்மினிஸ்டரில் நான், பேகர் சாப்பிடல என ஒரு குட்டி உண்ணும் நோன்பு இருப்போமா ?
வெள்ளையன் செலவிட்டதை விட்டு விடுவோம். பஸ் பிடித்து, கார் பிடித்து, றெயின் பிடித்து நாங்கள் வந்தது, எங்களது குழந்தைகள் பாடசாலைக்கு கட்டடித்தது, வேலைகளை துறந்துவிட்டு உனக்காக அலைக்கழிந்தது, உன் ஒரு உயிருக்காக மொத்த தமிழனும் பரிதவித்தது, மொத்த வன்னிச் சனத்தினதும் உயிரே உன் ஒருவனின் உயிரில் ஊசலாடியது, இமைக்க மறந்த கண்கள், உண்ண மறுத்த பொழுதுகள், பேச மறுத்த உதடுகள், துடிக்க மறுத்த நாடிகள், தளும்பி நின்ற கண்ணீர் துளிகள், தட்டுத்தடுமாறிய இளையோர், தவம், இது ஒரு தவம் என மௌனித்து நின்ற வெளிநாட்டோர் அத்தனை பேருக்கும் முக்காடு போட்டு, புலி, நாங்கள் புலி. நாங்கள் எதுவும் செய்வோம், நீங்கள் நம்பணும், முட்டாள் தமிழனே
நீங்கள் நம்பணும், என எங்கள் தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை..........
தேணி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment