இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தவறு இல்லை
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் தவறு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ. வி . கே. எஸ். தெரிவித்தார்.
கோவைக்கு திங்கள் கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அ தி மு க கூட்டணியி ல் இருந்து விலகிய பாமக, வரும் காலங்களில் தேர்தலில் தனித்தே நிற்கும் என்று எதி ர்பார்க்கலாம். பலவீன மான கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறியுள்ளது. இதில் யாருக்கும் லாப, நஷ்டம் கிடையாது. தனி த்து நிற்கும் நோக்கத்துடனேயே பாமக கூட்ட ணி யில் இருந்து வெளியேறியுள்ள தாகத் தெரிகிறது. இந்த முடிவு வரவேற்புக்குரியது. தங்கள் மீதான வழக்கு வாபஸ் பெற ப்பட்டால் மீண்டும் கூட்டணிக்கு முயற்சி செய்யலாம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கி ரஸ் தொண்டரி ன் ஆசை. அதற்கான கால நேரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இலங்கைத் தமிழர்கள்...: இலங்கையில் முகாமில் அடைத்துவைக் கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் இலங்கை அரசு குடி யமர்த்த மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளை யும் எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கைக்கு தூதுக்குழுவையும் அனுப்பிவைக்கும்.
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் இந்தி ய அரசி யல் சட்டத் தையும், இறை யாண்மையையும் முழுமையாக ஏற்று தங்களை இந் தி ய பி ரஜையாக மாற்றிக் கொள்ள விரும் பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தவறு கிடையாது.
அதேநேரம் அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment