மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தொடக்க விழா நேற்று ஆரம்பமா னது.
இந்த கட்சியை மலேசிய பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
‘மலேசிய தமிழர்களிடம் வறுமை அதிகமாக உள்ளது. தமிழ் பள்ளிக் கூடங்களில் கல்வித் தரம் குறைவாக உள்ளது. தமிழர்களின் தொழில் வாய்ப்பு குறைவாக உள்ளது. மலேசிய தமிழர்களின் கவலைகள் நியாயமானவை. அவர்க ளின் வருத்தங்களும் நியாயமானவை. அவர்கள் பிரச்சினைகள் அனைத்துக் கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசியல் கட்சிகளோடும் இணைந்து தமிழர்க ளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் போம்.
நான் எல்லா இன மக்களுக்கும் பிரதமர் என்பதால் மக்கள் சக்தி கட்சியை தொடங்கி வைக்க சம்மதி த்தேன்.
இந்த கட்சி என் தூண்டு தலால் உருவானது என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. தமிழர்கள் அனைவ ரும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்று திரண்டு நிற்பது தான் அவர்களுக்கு நல்லது.’
இவ்வாறு நஜீப் துன் அப்துல் ரசாக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment