இலங்கை நிலைவரம் குறித்து அறிக்கை மட்டுமே எம்மால் சமர்ப்பிக்க முடியும் -எமது சக்திக்குட்பட்டது இதுவே என்கிறார் பாலு
நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் இலங்கை அரசாங்க உயர் மட்டத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறி அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து இதுதொடர்பான முழுமையான அறிக்கையினை நாம் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம். இதுவே எமது கடமையாகும். இதற்குமேல் எத்தகைய முடிவினையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும் என்று இலங்கை வந்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயம் தொடர்பில்எமது சக்திக்குட்பட்ட வகையில் அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்க முடிய>ம். இதற்கப்பால் எத்தகைய நடவடிக்கையினையும் டெல்லி அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக எம்.பி.க்கள் குழுவை நேற்று மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போதே டி.ஆர். பாலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள தாங்கள் இந்திய எம்.பி.க்கள் என்ற ரீதியில் செயற்படாது தமிழர் என்ற ரீதியில் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அரசியலுக்கு அப்பால் சென்று செயற்படவேண்டும். உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் உங்களது விஜயம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். எனவே உங்களது செயற்பாடுகள் இலங்கை தமிழர்களுக்கு நன்மை அளிப்பதாக அமைய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர விமோசனத்தை அளிக்கும்வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உங்களது விஜயம் அமைய வேண்டும் என்று இந்தச் சந்திப்பின்போது தமிழக எம்.பி.க்களிடம் அமைச்சர் சந்திரசேகரன் வரியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும்போதே இலங்கை விடயம் தொடர்பில் அறிக்கையினை மட்டுமே எம்மால் சமர்ப்பிக்க முடியும். இதற்கப்பால் எத்தகைய முடிவுகளையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும். எமது சக்திக்குட்பட்ட வகையில் அறிக்கையினை சமர்ப்பிப்பதே எமது கடமையாகும் என்று டி.ஆர். பாலு மேலும் கூறியுள்ளார்.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment