பிரபாகரன் இருந்தால் சிக்கல் தான்-இலங்கை ராணுவ தளபதி!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தப்பியிருந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த கடைசிக்கட்ட போரில் ஒரு சில நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 3 லட்சம் தமிழர்கள் வன்னி பகுதியில் வன்கொடுமை முகாமில் சிக்கி தவிக்கின்றனர்.
இவர்களை விரைவில் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்ப இருப்பதாக கூறிய இலங்கை தற்போது அவர்களுடன் சிங்களர்களையும் குடியமர்த்த போவதாக கூறுகிறது.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறுகையில்,
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தப்பியிருந்தால் இலங்கையி்ன் எதிர்காலம் சிக்கலானதாக அமைந்திருக்கும். இதை பற்றி யாருமே கேட்டு அறிய தேவையில்லை.
விடுதலை புலிகளின் படை, ஆயுதம் மற்றும் தளவாடங்களை 60வது ஆண்டு கொண்டாட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இது நமது வீரர்களின் திறமையை மட்டுமல்ல. தீவிரவாதத்தை தடுக்காவிட்டால் நாடு எப்படி போயிருக்கும் என்பைத உணர வைப்பதாகவும் இருக்கிறது. தீவிரவாதத்தால் தான் இலங்கையில் ரத்தம் சிந்திவிட்டது.
தற்போது எங்களுடை முக்கிய வேலை இடங்களை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்துவது தான். அமைதியான வாழக்கை நடந்த பொறுப்பான முறையில் கடுமையாக போராடுவோம்.
தீவிரவாதம் பல நாடுகளுக்கு அச்சம் தரும் வேலையில் அவற்றை அழித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். அதிபர் ராஜபக்சேவின் துணிச்சலான தலைமை தான் இந்த வெற்றியை தேடி தந்தது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment