வீதியில் சென்ற பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைது!
வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கைப்பையை பறிப்பதற்கு முயற்சித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ள யாழ் தலைபுரத்தை சேர்ந்த செல்லதானு மதியழகன் என்பவரே கைது செய்யப்பட்டவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஈ.பி.டி.பி.யினரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர், கொழும்பில் மோட்டார் சையிக்கிளில் பயணம் செய்து கொண்டே வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment