புலம் பெயர் நாடுகளில் பிரபாகரனின் 55 பிறந்த நாள் கொண்டாட்டம்
இலங்கை தவிர்ந்த புலம் பெயர் நாடுகளில் பிரபாகரனின் 55 பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பிரதம விருந்தினராக கலந்து கொள்கின்றார். கனடாவிற்கு சென்ற அவரை கனடிய புலனாய்வுப்பிரிவினர் பார்சல் பண்ணி கோடம்பாக்கத்திற்கு அனுப்பிவிட்டனர்.
வெளிநாடுகளில் உண்டியல் குலுக்கும் பிழைப்புக் கூட்டம் இவ் நிகழ்வால் ரொம்பவும் நொந்து போயுள்ளனர். ஏற்கனவே உலகபொருளாதார சீரளிவினால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு போல் இவர்களது பொருளாதாரமும் சுருங்கி விட்டது. சும்மா இருந்து சண்டித்தனம் பண்ணி வயிற்றை வளர்த்த கூட்டம் உண்டியல் வருமானம் குறைந்ததினால் செய்வது அறியாது குழம்பியுள்ளனர் இதில் அறுசுவை மன்னர் 'மாண்ட வீரரிர் கனவு பலிக்கும்' என்ற இறக்காத கொடியை தற்போது இறக்கிவிட்டார.; வியாபார பெருக்கத்திற்கு இது இனி உதவாது என்ற தீர்க்க தரிசனத்தின் அடிப்படையில். கடந்த வருடம் தேர்த்திருவிழா போல் நடந்த பிறந்த தினக் கொண்டாட்டம் இம்முறை சனமின்றி சோபை இழந்து முகாரி ராகங்கத்துடன் நடை பெறுகின்றது.
வழமையாக வைகோவை கூப்பிடும் உண்டியல் கூட்டம் வைகோ பேசும் போது தலைவர் வருவார்... என முழங்கிவிடுவார் என்ற பயத்தில் அவரை அழைக்கவில்லை. திருமாவை கூப்பிடலாம் என்றால் அவர் பேசும் போது தலைவர் வரமாட்டார்.. என்று வன்னியில் கிடைத்த தகவலை அவிழ்த்து விடுவார் என்ற பயம். அதனால் சீமானை கூப்பிட்டார்கள.; ஏன் எனில் அவர்தான் தலைவர் வருவார் ஆனால் வரமாட்டார்.... என்று தெளிவாக பேசுவார் என்பதற்காக. அப்படியே அவர் வானொலி, தொலைக்காட்சியில் பேசிய பின்பு கனடிய புலனாய்வுப்பிரிவு பார்சல் பண்ணிவிட்டது இந்தியாவிற்கு. என்ன தமிழ் நாட்டு விமான நிலையத்தில் கைது இம்முறை நடை பெறமாட்டாது. கனடாவில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினால்தானே பேச்சை வைத்து கைது செய்ய முடியும். சீமான் கொடுப்புக்குள் சிரித்தபடி ராஜ நடையுடன் விமான நிலயத்தை விட்டு வெளியேறுவார்.
என்னமோ கனடாவில் 250 வண்டிகள் பிறந்த தினத்தில் கலந்து கொண்டனவாம். 'வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்' என்ற சுலொகத்தில் தலைவர் படத்துடன் தலைவரை அவமானப்படுத்த எழுதிய சுலோகன் போல் தெரிகின்றது. நந்திக்கடலில் முழந்தாள் இட்டு வீழ்ந்த வீரத்தையும் மண்டிணிட்ட மானத்தையும் நீங்கள் சுட்டிக்காட்டுவது 'ரொம்பவும் ஓவராக இல்லை....?' 'காமடி கிமடி ஒன்றும் பண்ணல்லீயெ........?' குசும்பு கூடித்தான் போய்விட்டது, இருங்கோ பொட்டன் இல்லாவிட்டால் என்ன நெடியவன் இருக்கின்றார் பார்த்துக் கொள்ளுவார். ஆ.... சொல்ல மறந்து போட்டன் தமிழ் நாட்டில் இம்முறை மிகவும் எழுச்சியாக பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றதாம்.
கருணாநிதி மௌனமாக அழுது கொண்டிருக்கையில். கனடிய ஊஆசு வானொலியில் உதயனின்(தாயக நோக்கு) எழுத்துருவாக்கத்தில் தமிழ் நாட்டு நிருபர் உருத்திரனின் குரல் வடிவில் அரங்கேறிய நாடகம் இது. இணையத்தளம் மூலம் கேட்க முடிந்தது. என் தமிழ் நாட்டு நண்பர் கேட்கின்றார் என்ன தமிழ் நாடு இந்தியாவில் உள்ளதா? அல்லது செவ்வாய் கிரகத்தில் உள்ளதா? என்று. தான் இருக்கும் இந்திய தமிழ் நாட்டில் அப்படி ஒன்றையும் காணோமாம். நல்ல வேடிக்கை இது. தலை சுத்துதுங்கோ... ஆளை விடுங்கப்பா........
(இராஜ்குமார்)
0 விமர்சனங்கள்:
Post a Comment