தனிய கண்ணீர் வடிப்பதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் உயிருடன் இருப்போராயும் கவனியுங்கள்… புலத்தான்
ஒரு ஊருக்காய் ஒரு குடும்பத்தைப் பலிகொடுப்பது தகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இது இப்படி இருக்க ஒரு லட்சியப்போர் என்ற போர்வைக்குள் பல லட்சம் தமிழர்களை உயிர்கொடுத்து தத்தம் குடும்பத்தை உலகளாவிய ரீதியில் நிலைநிறுத்த தமிழர்களின் இரத்தத்தை பாலாக மாற்றி தம்மைத்திடப்படுத்திய நினைவுநாளே இன்று ஒரு சில தமிழர்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தேசிய தினம் என்று வேற சொல்லிக் கொள்கினம். தேசிய தினத்தில் ஏன் மற்றைய தமிழர்களின் பட்டியல் இடம்பெறவில்லை? இன்றுவரை பல்லாயிரம் தமிழர்கள் மரணித்தனர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதோரையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்.
விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட தமிழர்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். எமது பெற்றோர் குற்றவாளி என்பதற்காய் அவர்கள் எனது பெற்றோர் இல்லை என்றாகிவிடுமா… புலிகளுக்கு அல்லது புலிகளின் கட்டளைக்கு ஒத்தில்லாதவர்கள் என்பதால் அவர்கள் தமிழர்கள் என்று இல்லாது போய்விடுமா???
இன்று நிலை என்ன வாச்சு? தலைகீழாக மாறிப்போச்சு! நாளை என்ன வாகும்… வருகின்ற வருடம் என்னவாகும் இன்னும் பத்துவருடம் கழித்து என்ன வாகும்… தற்போதைய புலிகளைத்தவிர மற்றைய அமைப்பின் போராளிகளும் புலிகளின் முன்னாள் போராளிகளும் தேசத்தனையன்களாகக்கருதப்படும் போது தற்போதைய புலிகளின் நிலை… பெயருக்குத் தேசிய மாவீரர் நாள் இதில் தேசியம் இல்லை மாவீரரும் இல்லை நாள்மட்டும் நிலைச்சிருக்கும்… எனினும் நாம் இன்றுவரை தமிழீழ தேசம் கொரிய கொள்கைக்காகத்தமிழர்களுக்காக உயிர்நீத்து அனைத்துத்தமிழர்களுக்கும் உளம் வெந்த அஞ்சலியைத்தெரிவிப்போம்.
இதில் புலிகள் என்ன எலிகள் என்ன எல்லா தமிழர்களுக்காகவும் கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறில்லை. தனிய கண்ணீர் வடிப்பதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் உயிருடன் இருப்போராயும் கவனியுங்கள்… அதற்காக நீங்களே தலைவராக தடம் புரளாமல் இருக்கின்ற தலைமைகளுக்குக் கட்டுப்படுங்கள்… இன்று புலிகளின் ஆதரவாளர்கள் புதுசாவெல்லாம் வழிதேடுகினம். இதைத்தானே அம்மான் என்ற அந்த மனிதன் முதலில சொல்லிச் சொல்லி தாங்க முடியாது தனிமையாகச் சென்றான்… அப்போது புழித்த புலிகளுக்கு இப்போது இனிக்கின்றதோ???
புலத்தான்
தென்றல்
0 விமர்சனங்கள்:
Post a Comment