அரசியல் களத்தில் வெற்றி பெறுவாரா சரத்பொன்சேகா?
இலங்கையின் முப்பது வருட கால யுத்தம் கடந்த மே மாதம் 18 ஆம் திகதியுடன் முடி வடைந்து விட்டது என்ற உறுதிப்பத்திரத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், அவர் பதவி உயர்த்தப்பட்டார்.
படையதிகாரிகளின் பிரதானி என்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பதவிக்கு அவர் அமர்த்தப்பட்டாலும் அரச தரப்பில் அது உயர் பதவி என்றே குறிப்பிடப்படுகிறது.
ஜெனரல் சரத்பொன்சேகாவைப் பொறுத்தவரையில் இந்தப் புதிய பதவியை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, அவர் ஜனாதிபதிக்கு எழுதிய ஓய்வு பெறுவதற்கான அனுமதிக் கடிதத்திலிருந்து வெளிப்படையாகத் தெரியவருகிறது.
யுத்தத்தில் வெற்றி கண்ட தன்னைப் பதவி ரீதியாக தோல்வியடையச் செய்தது அவரைப் பொறுத்தவரையில் மனதுக்கு ஒவ்வாத விடயமாகி விட்டது.
இதனோடு ஒட்டிய பல்வேறு விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டே அவர் தனது புதிய பதவியையும் ராஜினாமாச் செய்து இன்று சிவிலியன் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
ஆனால், இன்றும் அவரது பெயர் பல மாகவே அடிபடுகிறது. அரசியல் களத்தில் இன்று சரத் பொன்சேகா முக்கிய கதா பாத்திரமாகத் திகழ்கிறார். அரசி யலில் ஈடுபடும் தனது முடிவை அவர் நாசுக்காகத் தெவித்து விட்டார். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சமிக்ஞைகள் தெரிகின்றன.
அவர் ஆரம் பிக்கப் போவதாகக் கூறும் புதிய அரசியல் கட்சி சார்பில் சுயேட்சையாக ஜனாதி பதித் தேர்தலில் கள மிறங்கப் போகிறாரா அல்லது எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராகக் களமிறங்கப் போகிறாரா என்பதே இன்றைய கேள்வி.
தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் சார்பாக சுயேச்சையாகப் போட்டியிடும் போது அவர் எதிர்பார்க்கும் வெற்றியானது எட்டாக்கனியாகவிருக்கும் என்பதே உண்மை.
சிங்கள மக்கள் கூட இவ்வாறானதொரு நிலையில் முழுமையாக ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதப்பார்களா என்பதும் சந்தேகமே. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் சிங்கள மக்களின் கணிசமான வாக்குகளை நிச்சயமாக அவரால் பெறடியாது என்றே கூற டியும்.
ஆனால், அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் போது அவருக்கான வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே கூற முடியும். இந்த விடயத்தில் அவரது நிலைப்பாடு இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை.
இது இவ்வாறிருக்க, ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டுமென்பதில் பெரும்பான்மையான சிங்கள அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் என்ற பொது இணக்கப்பாட்டில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கான மந்திராலோசனைகளை மேற்கொண்டு வருவதும் உண்மையே.
ஜெனரல் சரத் பொன் சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறக்குவதில் மக்கள் விடுதலை முன்னணி கடந்த மாதங்களில் தாமரை இலை தண்ணீராக காணப்பட்டாலும் இன்று அந்த நிலையில் மாற்றம் தெகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி.யுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக ஜே.வி.பி. இன்று பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் கட்சிக்குள் ஆராய்ந்து வருகிறது. இந்தக் கட்சியின் முடிவு பெரும்பாலும் சாதகமாகவே அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரே ஏற்றுக் கொள்ளப்படலாம்.
அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்படுமானால் ஜே.வி.பி. முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
ஜே.வி.பி. ன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகளில் இரண்டின் விடயத்தில் இந்தக் கட்சி ஏற்கெனவே சூடு கண்ட பூனையாக உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல், அரசியல மைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற இந்த இரு விடயங்களிலுமே அவர்கள் சூடுகண்ட பூனைகளாகவுள்ளனர்.
ஜே.வி.பியினர் முன்வைத்துள்ள ஏனைய இரு விடயங்களும் தமிழ் மக்கள் சார்ந்தனவாகவே காணப் படுகின்றன. அகதி முகாம்களிலுள்ள தமிழ் மக்களைத் துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்தல், கைது செய்து தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நட வடிக்கைகளைத் துதப்படுத்தல் ஆகியனவே ஏனைய இரு விடயங்களாகும்.
இதில் அகதி முகாம் மக்கள் தொடர்பான ஜே.வி.பி.யின் கோக்கை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வலு விழந்ததாகவும் போய்விடலாம். காரணம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அகதி காம் மக்கள் ழுமையாக மீள்குடியேற்றப்படும் சாத்தியமே காணப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, ஜே.வி.பி.யின் இந்தக் கோரிக்கைகளை தமது கட்சி ஏற்றுக் கொள்வதாக ஜக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தாலும் இந்த விடயங் களில் சில திருத் தங்கள் மேற்கொள் ளப்பட வேண்டியுள்ளதாகவும் புதிர் போட்டுள் ளார்.
இந்த விடயத்தில் தாம் கொள்கையில் சிக்குண்டு கிடக்க முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் பொது வேட்பாளர் விடயத்தைப் பொறுத்தவரையில் நோக்கத்துக்காகச் செயற்பட தமது கட்சி தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெவித் திருப்பது, நோக்கம் என்பது இங்கு மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் எப்படியும் தோற்கடிக்க வேண்டுமென்பத னையே வெளிக்காட்டுகிறது. இதற்காக என்ன விலை கொடுத்தாலும் தமது நோக்கத்தை அடைய வேண்டு மென்பதனையே சுட்டி நிற்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால், ஜே.வி.பி.யின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை இரண்டாம் பட்சமான விடயமாகவே கருதலாம். இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி யின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக சிறுபான்மை இனக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதும் ஒரு கேள்வியாக இங்கு எழுகிறது. இந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், நான்கு விடயங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா திருப்திகரமான விளக்கம் தர வேண்டுமென ஏலவே கூறி விட்டார்.
குறிப்பிட்ட அந்த நான்கு விடயங்களுக்கும் திருப்தியளிக்கும் வகையிலான பதிலை ஜெனரல் சரத் பொன்சேகா அளிப்பாராயின் தனது கட்சியும் ஸ்ரீலங்கா ஸ்லிம் காங்கிரஸும் இது தொடர்பில் ஆராய்ந்து ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியுமெனவும் அவர் தெவித்து விட்டார்.
நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை என்ற விடயத்தில் ஜனநாயக மக்கள் ன்னணியும் ஜே.வி.பியும் ஒன்றுபட்ட நிலையிலுள்ளன.
ஆனால் ஏனைய முன்று விடயங்களிலும் இவ்விரு கட்சிகளும் வேறுபட்டுள்ளன.
இவ்வாறானதொரு நிலை ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் விடயத்தில் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பொது இணக்கப்பாட்டைக் கொண்டு வருமா என்பதும் கேள்விக் குறியே.
அதேவேளை, மனோ கணேசனின் ஏனைய விடயங்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவை தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கியிருக்கலாம். அகதி முகாம் மக்கள் மீள் குடியேற்றம், இலங்கையில் நிலவுவது இனப் பிரச்சினையா? பயங்கர வாதப் பிரச்சினையா?, பயங்கர வாதப் பிரச்சினைதீர்க்கப்பட்டால் தமிழர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக கருத முடியுமா? ஜனாதிபதி ஆட்சி றையானது இன்று அரசர் ஆட்சி முறை போன்று மாற்றம் பெற்றுள்ள தனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
போன்ற மனோ கணேசனின் கேள்விகளுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வாறான பதிலைத்தான் வழங்கப் போகிறாரோ தெயவில்லை.
"பலன் அழுத்தங்களுக்காகவும் சிலன் கண்ணீருக்காகவும் தமிழ் அகதி மக்களை அவசரமாகக் குடியேற்ற முடியாது' என்றும் "இலங்கையில் நிலவுவது பயங்கரவாதப் பிரச்சினையே தவிர இனப் பிரச்சினையல்ல....
பயங்கரவாதப் பிரச்சினையை முற்றாக ஒழித்தால் வேறு எதற்கான தீர்வும் தேவைப் படா'தெனவும் ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளூர் அரச தொலைக்காட்சிக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் பேட்டி வழங்கியிருந் ததனை எவரும் மறந்து விட மாட்டார்கள்.
ஆகவே, இந்த விடயத்தில் ஜெனரலின் நாபிறழுமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். முன்னர் கூறியதற்கு அவர் மாற்றமான பதிலை அளிப்பாரானால் அதனை அவரது தேர்தல் கால வாக்குறுதியாக மட்டும் தான் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஜெனரல் சரத் பொன் சேகா தர்மசங்கடமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சர்வதேச நீதிமன்றில் அல்ல.
அரசியல் கட்சிகளின் அவை முன் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆகவே, இவ்வாறான நிலைகளை யெல்லாம் அவர் தாண்டினால் மட்டுமே அவர் பொது வேட்பாள ராக அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கப்படும் ஒருவராக இருப்பார்.
இதுபோன்றே ஐக்கிய தேசிய முன்னணியில் முக்கிய கட்சி யாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுகூட ஜெனரல் தொடர்பில் முன்னர் சில கருத்துகளை முன்வைத்திருந்ததனையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
"சரத் பொன்சேகா இரட்சணிய சேனையின் தலைமைப் பொறுப்புக்குக் கூட லாயக்கற்றவர்' என மங்கள சமரவீர எம்.பி. முன்னர் தெவித்திருந்தமை தொடர்பில் மங்கள சமரவீரவின் இன்றைய நிலைப்பாட்டின் மாற்றம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 விமர்சனங்கள்:
Post a Comment