சிவகுமாரனின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கவும்
பம்பலப்பிட்டி கடற்கரைப் பகுதியில் வைத்து தாக்கிக் கொல்லப்பட்ட சிவகுமாரனின் கொலையுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதோடு, கொல்லப்பட்ட மேற்படி இளைஞனின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இக்கொலையை இனரீதியாகப் பார்ப்பதை விடுத்து, மனிதத்துவத்துடன் நோக்க வேண்டியதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் தெ வித்துள்ளார். இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் கொழும்புக் கிளைத் தலைவரும், பிரதியமைச்சருமான பெ.இராதா கிருஷ்ணன் மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்தக் கொடூரமான கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலுமொரு உதவி பொலிஸ் அதிகாரி உட்பட பலரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெவித்துள்ளனர்.
இது பாரதூரமான கொலைக் குற்றமாகும். எனவே, அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். அத்தோடு, நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே இதனை மேற் கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும். ஒரு மனநோயாளியை எவ்வாறு கைதுசெய்வது? பின்னர் அவரை எவ்வாறு நடத்துவது என்றெல்லாம் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கற்பிக்கின்றனர்.
ஆனால் கொலை செய்யப்பட்ட மனநிலை பாதிக்கப்ட்ட சிவகுமாரன் தொடர்பில் இவ்வாறான நடைறைகள் எதுவும் கடைப்பிடிக்கப் படவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment