பிரபாரகரன் உயிரோடு இல்லை: தவறான பிரச்சாரங்களும் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்: ஆனந்தசங்கரி கருத்து
புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் பிரபாகரன் வருவார் என்று இன்னமும் கூறிக்கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு நான் சவாலாகவே இதனைத் தெரிவிப்பதாகவும் திரு ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியில் நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரபாகரன் இருக்கிறார் என்றும் அவர் அப்போது வருவார் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் கூறிக்கொண்டிருப்பதால் இங்குள்ள மக்களுக்குத்தான் துன்பம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறுவதால், இதன்மூலம் புலிகள் மீண்டும் வருவார்கள் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் முல்லைத்தீவிலும் மற்றும் இடங்களிலும் பாரிய ராணுவ முகாம்களை அமைக்க முற்படும் என்றும் அதனால் மக்களே பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆனந்தசங்கரி அந்தப் பேட்டியில் தெரிவித்தார். பிரபாரகரன் இல்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுகின்றேன். அவர் இறந்தபோது காட்டிய உடலை நான் பார்த்திருக்கின்றேன். அது பிரபாகரனுடையதுதான் என்பது எனக்கு திட்டவட்டமாகத் தெரியும். எனவே அவர் இருக்கிறார், வருவார் என்ற உங்கள் தவறான பிரச்சாரங்களை அடியோடு விட்டுவிடுங்கள் என்றும் ஆனந்தசங்கரி அவர்கள் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சிப் பேட்டியில் கோரிக்கை விடுத்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment