யாழ்பாணத்தின் இன்றைய நிலைமைபற்றி பிரபல ஊடகவியலாளர் லங்காபேலி கூறுகிறார்.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும் யாழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இன்னும் யாழ் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையிலேயேஉள்ளனர்.
யாழ் மாவட்டத்திற்கு வெளியே மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்குள்ளேயும் செல்ல முடியாதநிலையிலேயே அவர்கள் உள்ளனர். தமது உறவுகளின் மரண வீட்டுக்கு போவதாயினும் பாதுகாப்புஅமைச்சின் அனுமதியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உணவு பொருட்களின் விலைஅதிகரித்த நிலையே காணப்படுகிறது. வீதிகள் யாவும் 4-5 மணியுடன் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஜனாதிபதி தேர்தலைப் பற்றி எதுவித அக்கறையும் யாழ் மக்களிடம் காணப்படவில்லை. பேரினவாதி ஒன்று பேரினவாதி இரண்டு எனறே மகிந்தவையும், சரத் பொன்சேக்காவையும் அவர்கள்எண்ணுகின்றனர்.
யாழ்பாணத்தில் இருந்து வெளியே செல்வதாயின் விமானத்தின் மூலம் சென்றால்,விமானத்தின் மூலமே திரும்ப வரவேண்டும். கடற்பயணம் என்றாலும் தரைப்பயணம் என்றாலும்அதேநிலைதான். விமான பயணத்திற்கு 40,000 ரூபா அளவிலும், தரை வழிபயணத்திற்கு 6000ரூபாஅளவிலும் செலவாகிறது.ஊடக சுதந்திரம் அறவே இல்லாத நிலையே காணப்படுகிறது.
ஏதாவது செய்திகளைபத்திரிகையில் பிரசுரித்தால், அந்தச் செய்தியின் மூலங்களை விசாரித்து பாதுகாப்பு பிரிவினர் தொல்லைகொடுக்கின்றதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வலிகாமம் மக்களின் துயரநிலை உச்சநிலையில் உள்ளது வலிகாமம் வடக்கில் 45 கிராமசேவகர் பிரிவில் 29 பிரிவு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளன. இவர்கள் மீள குடியேற அனுமதிக்குமாறுகோரி 2006ல் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் 600 குடும்பங்களை மீளக்குடியேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதை நடைமுறைப் படுத்தவில்லை. வலிகாமம்வடக்கில் 46 பாடசாலைகள் இருந்துள்ளது. அவற்றில் 21 பாடசாலைகள் இயங்குகின்றன. மிகுதிபாடசாலைகள் இயங்காதநிலையில் உள்ளது.தற்போது தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்வண்டியில் பயணம் செய்வது மிகவும்பிரச்சினையான ஒன்றாகும். எல்லா பஸ்வண்டிகளும் ஒன்றாகவே பயணிக்கின்றன. ஒரு பஸ்வண்டிக்கு ஏதும் கோழாறு என்றால் எல்லா பஸ்வண்டிகளும் நின்று விடுகின்றன. திருத்தம் மேற்கொள்ளப்பட்டபின்னரே பயணிக்கின்றன. இன்று யாழ் மக்களுக்கு போக்கு வரத்து பிரச்சினையே அதிக பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினை கடந்த 20 வருடகாலங்களாக இம்மக்கள் எதிர் நோக்குகின்றனர்.
இராணுவத்தின் பரிசோதனை நிலையங்கள் அதிகரித்த நிலையே காணப்படுகின்றன. மக்கள் இந்த பரிசோதனை நிலையங்களை சந்தித்தே செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன வடக்கு வசந்தம் என்ற போர்வையில் அரச நிர்வாக செயற்பாடுக்காக விசேட அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் 18 அதிகாரிகள் உள்ளனர் இவர்களில் இரண்டுபேர் மட்டுமே தமிழர்களாக உள்ளனர். அவர்களும் கொழும்பை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.இடம் பெயர்ந்த மக்கள் தற்போது யாழ்ப்பாணத்துக்கு வன்னியில் இருந்து வரத் தொடங்கி உள்ளனர். வேலணை பகுதியில் 300 போ வரை வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் திருமண வைபவத்திற்காக சென்றிருந்தார். யுத்தம் மூண்டதால் அவரால் திரும்ப முடியவில்லை.யுத்தத்தில்அவருக்கு ஒரு கை இல்லாது போய் உள்ளது. அரசாங்கம் ரூபா 5000, வழங்கியுள்ளது. மிகுதி 20000ரூபா வழங்குவதாக கூறியுள்ளது. இந்த மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை உறவினர்கள் வீடுகளிலும், மர நிழல்களிலும் தங்கி வாழ்கின்றனர்.பொதுவாகவே யாழ்மக்கள் ஒரு திறந்த வெளி சிறையில் வாழ்வதை போன்ற மனநிலையிலேயே உள்ளனர். 'வடக்கில்வசந்தம்" என்று கூறப்படுகிறது உண்மையில் வடக்கில் சோகமே அரசாங்கத்தால் மேடை யேற்றப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment