மலையக மக்களின் நிலைமை தொடர்பாகஎள்ளளவும் கவலை கொள்ளாதமலையக தலைவர்கள்
மலையக மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த மலையக தலைவர்கள் இன்று வடக்கு கிழக்குமக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் குழி பறிக்கும்செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.
வன்னியில் நடைபெற்றமனித அவலம் தொடர்பாக உலகத்தின் கண்டனங்களுக்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றது.தமிழ்மக்களின் விடுதலை போராட்டத்தை இந்தியஅரசாங்கம் தோற்கடிப்பதில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவந்தது. குறிப்பாக இவ்விடயத்தில் சோனியாகாந்தியின் செயற்பாடு மகத்தானதாக விளங்குகின்றது. தனதுசெயற்பாடுட்டுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலையும் சோனியா பெற்றிருந்தார். எனவே மகிந்த அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சிகளில் சோனியாஈடுபட்டிருந்தார். இதன் வெளிப்பாடாகவே தமிழ் நாட்டு தூதுக் குழு இலங்கை வந்துவன்னியில் இடம் பெயர்ந்தது, முட்கம்பி முகாம்களில் வாழும் மக்களை பார்த்துசென்றது.
இந்த தூதுக் குழுவிற்கு மலையகத்தலைவர்கள் பலத்த வரவேற்பை வழங்கிஇருந்தனர். இதில் உள்ள வினோதம் என்னவென்றால் தமிழக தூதுக்குழுவை சாதாரண தோட்டமக்களோ, அவர்களின் பிரதிநிதிகளோ சந்திப்பதற்கு எத்தகைய ஏற்பாடுகளும் இடம் பெறவில்லை. மலையக மக்கள் தமது பிரச்சினையை தூதுக் குழுவிற்குதெரிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. தமிழக தூதுக்குழுவின் வருகையே மகிந்தஅரசை காப்பாற்றுவதற்கான முயற்சியாக இருந்தமையால் மக்களை சந்திக்கும்விடயத்தில் தூதுக்குழுவும் அக்கறைகாட்டவில்லை மலையக தலைவர்களும் அதற்குஇடம் கொடுக்கவில்லை.வன்னி மக்களின் நிலை திருப்தி கரமாக உள்ளது என தமிழ் நாட்டுதூதுக்குழு சான்றிதழ் வழங்க, தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த ஆறுமுகம் தொண்டமானும், முத்துசிவலிங்கம் வன்னி மக்களின் நிலை மேம்பட்டுள்ளதாக சாட்சியமளித்து விட்டு வந்துள்ளனர். மேலும் மஸ்கேலியாவை சேர்ந்த இரு யுவதிகள் கொலை செய்யப்பட்டநிலையில்,அதன் அதிர்ச்சி அகலாத நிலையில் தற்போது காலி மாவட்டத்தில் நெலுவமதோட்டத்தில் 13வயது தமிழ் சிறுமியை மேலதிக நீதிபதி யொருவர் பாலியல்வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்படி சிறுமியின் தந்தையை சங்கிலியால் பிணைத்து குறிப்பிட்ட மேலதிக நீதிபதி தாக்கியதாகவும்தெரிய வருகிறது.
அதேபோன்று பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட சிவகுமாருக்கு என்னநடந்தது என்பதை முழு உலகமுமே அறிந்துள்ளது. எனவே எங்கு பார்த்தாலும் மலையக மக்கள், மலையக இளைஞர்கள் மலையக சிறுமிகள்பாதிப்புக்கு உள்ளாகும்நிலையே காணப்படுகிறது. இவை தொடர்பாக மலையக தலைவர்கள் என்னசெய்கிறார்கள்? மத்தியமாகாணசபைக்கு தெரிவான 8 மலையக தமிழ் உறுப்பினர்களில்மாகாணசபை நடவடிக்கைகளில் இரண்டு தமிழ் உறுப்பினர்களே பங்கேற்பதாக அறியமுடிகிறது. இவர்கள் கொடுப்பனவுகளை மாத்திரம் தவறாது பெற்றுக் கொள்வதாகதெரிகிறது.
தேர்தல் கால விளம்பரங்களுக்காக செலவிடும் பணத்தில் ஒரு சிறு பகுதியைமலையக மக்களின் நலனிற்காக செலவிட்டால் கூட மலையக மக்களின் பிரச்சினையில் சில என்றாலும் குறைய வாய்ப்பு உண்டு.தற்போது மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சி பெரியளவில் பாதிப்புக்குளளாகி வருகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் மலையக மாணவர்களின்கல்வி நிலை மோசமாக பாதிப்புக்கும் உள்ளாகும் அபாய நிலை தோன்றி இருப்பதாகஆய்வுகள் கூறுகின்றன.இலங்கையில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகல் காரணமாக மலையக மாணவர்களே அதிகமாக பாடசாலைகளில் இருந்து வெளியேறுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் வறுமை நிலையாகும். தென்மாகாணத்தில் தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் சொல்லொணா துயரங்களுடன் வாழ்கின்றனர். இம் மக்கள் அடிமைகளை விட மோசமான நிலையில் வாழவேண்டியநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இம்மக்கள் இதுவரை ஒரு நாள் என்றாலும்தற்போதைய மலையக தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திர சேகரன் மனோகணேசன் போன்றவர்களை தமது பகுதிக்கு வருகை தவரவில்லை என மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஆனால் அம் மக்களின் வேதனத்தில் சந்தாப்பணத்தை மாத்திரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுருட்டிக் கொண்டு போகிறதாம்.
இன்று மலையக தலைவர்கள் அனைவரும் கொழும்பிலேயே சஞ்சரிக்கின்றனர்.இவர்கள் மலையக மக்கள் தொடர்பாக தலைநகரத்தில் எத்தகைய போராட்டங்களையும் நடத்தவில்லை இதற்காக இவர்கள் மலையகத்தில் நிறைய போராட்டங்களைநடத்துகிறார்கள் என அர்த்தம் கொள்ள முடியாது. மலையக தொழிலாளர்களின் நாளாந்த கூலி ரூபா 500 போராட்டத்தை காட்டிக் கொடுத்த கையோடு வடக்குகிழக்கு மக்களின் போராட்டத்திற்கும் ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே இத்தகைய தலைவர்களை எதிர்காலத்தில்அம்பலப்படுத்துவதுடன் மலையக மக்களின் போராட்டங்களை விரிவு படுத்துவதற்காக முழு முயற்சிகள் இடம்பெற வேண்டும்.
சுந்தரம் மகேந்திரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment