திஸ்ஸநாயகத்தின் வழக்கில் யார்குற்றவாளி கூண்டில்.
ஊடகவியலாளர் ஜே. எஸ் திஸ்ஸநாயகம் மார்ச் 7ம் 2009 வரை தடுத்து வைக்கப்பட்டுபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு 31-08-2009ல் மேல்நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு இவருக்கு 20 வருடங்கள் கடூழியசிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன். இந்த தீர்ப்பின் மூலம் சுயநிர்ணய உரிமைக்காககுரல் கொடுக்கும் அனைவருக்கும் இத்தகைய தண்டனை வழங்கப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின்பாதுக்காப்புக்காகவும் செயற்பட்டவராவார்.
இந்த அடிப்படையான உரிமை இன்று முற்றாக பறிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் இவர்விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் இவரால்எழுதப்பட்ட கட்டுரைகளுக்காகவும் குற்றவாளியாககாணப்பட்டுள்ளார். இவரின் கட்டுரைகள் இனக்குரோதத்தை தூண்டுவதாக அமைந்திருந்தன என அரசால் அர்த்தம்கற்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் அடிப்படையில் நவ காலனித்துவத்திற்கு சார்பாக ஆட்சியில் இருந்த ஒவ்வொரு ஆட்ச்சியாளருக்கும்;,எதிர்கட்சியினருக்கும்; 20 வருட சிறைத்தண்டனைவழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் அரசியல் தீர்வுகளை சீர்குலைத்ததாலும், இனக்குரோதத்தை தூண்டிவிட்டதாலும் இந்த தண்டனை அவர்களுக்குவழங்கப்படிருக்கவேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரையில் எனது அபிப்பிராயம் இந்த வழக்கு சந்தேகத்துக்கு இடம்இல்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்பதேயாகும். இவரால்எழுதப்பட்ட கட்டுரைகள் இனவன்முறையை தூண்டின என்பதற்கான எத்தகைய ஆதாரங்களும் இங்கே நிரூபிக்கப்படவில்லை. வெளியிப்பட்ட சஞ்சிகையில் 50 பிரதிகள்விற்கப்பட்டிருந்தன எனவே பயங்கரவாத தடைச்சட்டமானது தன்னிச்சையாக அர்த்தம் கொள்ளத்தக்க விதத்தில்செயற்படுத்தப்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் என்னைப்போல் ஏனைய அறிவாற்றல் உடைய எவரும்திஸ்ஸநாயகம் இனவன்முறையை தூண்டும் முயற்சியில்ஈடுபட்டார் என ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அவரது மனோபாவமும், அரசியல் நிலைப்பாடும் அப்படியானதல்ல இவர்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழ் மக்கள்எதிர்நோக்கும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்தொர்பான நிலைப்பாட்டிலுமே இவர் இருந்தார்.
தமிழர் வாழும் பகுதிகள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களும், குறிபார்த்து செயற்படுத்தப்படும் அரசியல்படுகொலைகளும், குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்களை இலக்காக வைத்து செயற்படுத்தப்படும் கொலைகள் இந்தவரிசையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். எனவே நாம் அங்கே எத்தகைய பிரச்சினைகளும் இல்லை எனவாதிட்டாலும் அங்கே அரசாங்கம் யுத்தத்தை முன் எடுத்து சென்றபோது எத்தகைய மனித இழப்புக்களும் ஏற்படவில்லை என கூறமுடியுமா. என்னைப் பொறுத்தவரையில் மேற்படி நடவடிக்கைகள் அறியாமையுடன் கூடிய வஞ்சக நடவடிக்கைகளாகும். இன்று முழு உலகத்திற்கும் வெளிப்படையாகவே இந்ந யுத்தத்தில் மிகப் பிரமாண்டமானஅளவில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அரசும் விடுதலைப்புலிகளும் இந்த இழப்புக்கு பொறுப்பாகும். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள்பயங்கரவாத செயற்பாடு இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது என மார்தட்டி பேசியுள்ளனர். இன்றும் இம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் பாதுகாத்தல் என்ற போர்வையில்தடுத்து வைத்திருப்பதால் இம் மக்களின் பாதுகாப்பு மனித உரிமைகள் பாரியஅச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.
இராணுவ ஆட்சி அடக்குமுறை என்பவற்றுக்கு உள்ளாகி ஒடுக்கப்படும் மக்களின்சுதந்திரம், பாதுகாப்பு தொடர்பாக குரல் எழுப்புவதை எப்படி துரோகம் எனஅடையாளப்படுத்தப்பட முடியும். முழு அளவிலானபாதுகாப்பும், மனித உரிமை மீறல்களும்இடம் பெற்றிருக்கும் நிலையில் அதற்கு எதிராக குரல் கொடுப்பது குற்றமாகுமா?.உலகத்தில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசில் கூடஅங்குள்ள பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படையான அரசியல் அமைப்புரீதியாக மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் அபுசறிப், வண்டலாமா போன்ற சிறைக்கூடங்களிலும்யுத்த பூமியாக விளங்கும் ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும்தமது சொந்த நாட்டிலும்; இவர்கள் புரிந்த மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராகவும்குரல் கொடுக்க மக்களால் முடிந்தது. அங்கே பயங்கரவாத தடைச்சட்;டத்திற்கு ஒப்பானசட்டம் நடைமுறையில் இருக்கின்றபோதும் அங்குள்ள மக்கள் தமது எதிர்ப்பைகாட்டுவதற்கு எந்தவிதமான ஒடுக்குமுறைகள் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராககுரல் கொடுக்கவும் உரிமையுடையவர்களாக இருக்கின்றனர்.
ஆனாலும் நேட்டோமற்றும் அமெரிக்க படையினர் ஈரான், ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட செயற்பாடுகளைஎப்படி நியாயப்படுத்தினார்களோ அதை இங்கே உதாரணமாக இங்கேயும் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு உருட்டு புரட்டான நியாயமாக மாறியுள்ளது. எது எப்படி இருந்தாலும் அது ஈரான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான, முல்லைத்தீவு, சாம்பூர்,வாகரை எங்கு நடந்தாலும், குற்றம் மக்கள் மீது இளைக்கப்பட்டிருந்தால் அதுகண்டிக்கப்படவேண்டியதாகும். இங்கே யாரும் ஆட்சியாளரின் செயற்பாடுகளை கண்டித்தால்அவர்கள் இனங்காணப்பட்டு வேட்டையாடப்படுவதுடன் அவர்கள் மீது துரோகி என்ற முத்திரையும் குத்தப்படும் சிலருக்கு தேசத்துரோகியாக தெரிபவர் மற்றவர்களுக்குதாய்நாட்டை நேசிப்பவராக தெறியக்கூடும். சிலருக்கு பயங்கரவாதியாக தெரிபவர் மற்றவருக்கு விடுதலைப்போராளியாக தெறியலாம். நீங்கள் போராட்டத்தில் எந்த பக்கத்தில்இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துத்தான் இவை அமையும்.
நாம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக்கூறி யாரையும் சிறையில் அடைக்க முற்படுவோமாயின் முதலில் சிறையில் அடைக்கப்படவேண்டியவர்களாக கௌரவ பசில் ராஜபக்ஸ, கௌரவ மறைந்த சிறிபதி சூரியாச்சி கௌரவ மங்கள சமரவீர இவர்களுடன் அன்று ஐக்கிய மக்கள்கூட்டமைப்பின் முன்னனியின் உயர்நிலை தலைவர்களையே முதலில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவர்களுக்கே 20 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும். இவர்களுள் மூவர் விடுதலைப்புலிகளுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்தனர் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸ தொடர்பாகவே இவர்களின் இரகசிய தொடர்பு இருந்துள்ளது. மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்குவடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மூலம் தேர்தல் பகிஸ்கரிப்பை மேற்கொள்வதேஇவர்களின் இலக்காக இருந்தது. இதை சட்டரீதியாக பார்க்கின்ற போது ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணியினரை ஏமாற்றுதலில், சூழ்ச்சியில் ஈடுபட்டமைக்காக 20 வருடங்கள்சிறையில் வைக்க முடியும். இந்த முழுச்சம்பவமும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.ஆனாலும் அது குழப்பம் விளைவிக்கப்பட்டு மறைக்கப்பட்டது.
அவர்கள் நினைத்தால்என்னை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று 20 வருட தண்டனையை வழங்கலாம்,குற்றச்சாட்டுக்கள் நீதி மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையானால் நான்வாகனவிபத்தின் மூலம் கொல்லப்படலாம், அல்லது வெள்ளை வான் மூலம் கடத்தப்படலாம். ஒரு பிரசை என்ற வகையில் என்னால் கூறக்கூடியது இதுவே, இந்த விடயம் தொடர்பாக தயவு செய்து நீதிமன்றத்தில் வழக்கை தொடரவும், அல்லது சுதந்திரமான ஆணைக்குழு விசாரணை நடத்தவேண்டும். இதன்மூலம் வெகுஜனங்கள் உண்மைநிலையை அறியவாய்ப்பு ஏற்படும். உண்மையில் திட்டமிட்டு இனவன் முறைகளை தூண்டியவர்கள்யார்? பிந்துனுவௌ, மாளிகாவத்தை, கந்தப்பொலை போன்ற இடங்களில் வன்முறைகளைதூண்டியது யார்? தேவாலயங்கள் மீது எப்படி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில்சம்பந்தப்பட்ட யாருக்காவது 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அழிக்கப்பட்டதா? யுத்தம் உச்ச நிலையில் நடைபெற்ற வேளையில் இராணுவதளபதிசரத்பொன்சேக்கா,சம்பிக்கரணவகே ஆகியோர் விடுத்த அறிக்கைகள் எப்படியானவை?இந்த நாடு சிங்கள பௌவுத்தர்களுக்குரிய நாடு, ஏனையவர்கள் வந்தேறுகுடிகள் என்றேகுறிப்பிட்டனர். இத்தகைய அறிக்கை இனவன்முறையை தூண்டாதா? இத்தகையகீழ்த்தரமான முதலாளித்துவ அரசியல் நிலைமைகளிலேயே வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதையாராலும் புரிந்து கொள்ள முடியும்.இங்கே சிறில்மத்தியூ, ஜே. ஆர் ஜெயவர்தன, போன்றவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.இன வன்முறைகளை இவர்கள் தூண்டவில்லையா? கறுப்பு ஜுலைஎப்படி உருவானது?மிக மோசமாக யாழ் மாவட்ட சபைத்தேர்தல் அதனுடன் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான செயற்பாட்டின் மூலம் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் இதன்மூலம் ஒருதேசிய இனத்தின் கலை கலாசாரபண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லையா? இந்த வெறுக்கத்தக்க குற்றத்தை புரிந்த யாருக்கு தண்டனைவழங்கப்பட வேண்டும். மனிதாபிமான பணிகளை புரிந்த பணியாளர்கள் 17 பேரில்படுகொலைகளை பற்றி என்ன நடந்துள்ளது. திரு கோனமலையில் 5 மாணவர்களின்கொலைகள், நடைபெறும் ஆட்கடத்தல்கள், கொலைகள் கப்பம் பெறுதல், சித்திரவதைகள்,இவற்றுக்கு யார் பொறுப்பு? இதுபோன்ற மிருகத்தனமான பலாத்காரத்தை பிரயோகிப்பதனால்இனவாதம் மிருகத்தனமாக கோலோச்சுகிறது இவை மூலம் மக்களிடையே வெறுப்பையும்அவநம்பிக்கையும் வளர்க்க முடியும். இவையே பிரிவினவாதத்தை பற்றி எரியச் செய்யும்ஏதுவாகும். எனவே யார் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். தற்போது கௌரவஅமைச்சர் ரோகித்த போகொல்லாகம மாவட்ட நீதி மன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்தில்விவாதிப்பதில் சட்ட ஆட்சியை விமர்சனத்துக்கு உட்படுத்துதற்கு ஒப்பானது எனகூறியுள்ளார். இவர் எங்கள் எல்லோரையும் பயமுறுத்துகிறார்.
இப்படியான பயமுறுத்தல்களுக்கு நாம் அஞ்சவேண்டியதில்லை. நாம் அவருக்குகூற விரும்புவது அரசியல் அமைப்பை மீண்டும் ஒருமுறை படிக்கும்படி. மக்கள் அதிகாரத்தைபெற்று அதிகாரத்தில் இருக்கும் அரசுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் சட்டரீதியான நடவடிக்கைஎடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை கூறுவதற்கும் அரசியல் அமைப்பு ரீதியானகடமைப்பாடு உண்டு. சட்டப்படி அரசு சட்ட மன்றம், நிறைவேற்று துறை நீதித்துறைமற்றும் ஏனைய அதிகார பிரிவுகள், மக்களின் நம்பிக்கைக்கும் இறையாண்மைக்கும்அமைவாக இயங்குவதுடன் மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தவேண்டும். இந்த நிறுவனங்கள் முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இயங்கினாலும்கூட இவர்கள் மக்களின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் உரிய கௌரவத்தை வழங்கவேண்டும். தற்போது 300,000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள்என்ற காரணத்தால் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரு பகுதியினரும்மக்களை கேடயங்களாக கருதியமையால் போரின்போது மக்கள் பாரிய அளவில்பாதிப்புக்குள்ளாகினர். இராணுவ ரீதியான தீர்வை நோக்;கிய செயற்பாட்டினாவேயேஇத்தகைய இரக்கமற்ற விளைவுகளை மக்கள் எதிர் நோக்கினர். இராணுவ ரீதியானதீர்வு முனைப்பு பெற்றதாலேயே தனிநாடு என்ற அவா முன்னெப்போதையும் விட உறுதியாகமுன்னெடுக்கப்பட்டது.
இத்தகைய நிலைமைகளால் தமிழ்மக்களின் தனிநாடு என்ற வித்துக்கள் முனபைவிடமிகமுனைப்புடன் மீண்டும் நாட்டப்பெற்றது. அதை செழிப்பாக வளர்க்கும் பொறுப்பு எதிர்காலஇளைஞர் சமுதாயத்திடம் கையளிக்கப்படும். இங்கே எழும் கேள்வி என்னவென்றால் யார்ஐக்கியத்துக்காக. நேர்மைக்கா, சமத்துவத்துக்காக, நாட்டின் கௌரவத்துக்காக செயற்படப்போகின்றனர். யார் உண்மைக்காக நீதிக்காக முன் நின்று செயற்பட போகின்றனர். இங்கேஎழும் கேள்வி என்னவென்றால் உண்மையான தேசப்பற்றாளர்யார் என்பதாகும். மேலும் யார்நாட்டையும் இலங்கை தேசத்தையும் மக்களையும் உண்மையில் விரும்புகின்றனர். யார்ஐக்கியத்தையும் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் நிர்ணயிக்கப்போகின்றனர். யார் குற்றவாளிகூண்டில் நிற்கப் போகின்றனர். நான் நினைக்கிறேன் மக்கள் ஒருநாள் கிளர்ந்து எழும்புவார்கள்அப்போது அவர்கள் காடையர்கள், கொலைகாரர்கள், அனைவருக்கும் வரலாற்றில் தகுந்தபாடதடதை புகட்டுவார்கள் தற்போது மக்களின் நீதியிடம் உருவாக்கப்புடுகிறது. இதுசுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் இயக்கத்தின் பிரதான பணியாகும்.ஜனநாயகத்துக்கு, மனிதத்துவத்துக்கு எதிராக புரியப்பட்ட குற்றங்களுக்காக பதில் சொல்லநிர்ப்பந்திக்க வேண்டும். இத்தகைய அரசியல் முக்கியத்துவம் திஸ்ஸநாயகத்தின் தீர்ப்புஎமக்கு வழங்கியுள்ளது.
திஸ்ஸநாயகத்தின் வழக்கை உற்றுநோக்கினால் ஒடுக்குமுறையுடன் கூடிய தொடர்ச்சியானபாரபட்சம் அரசியல் ஒடுக்குமறை, ஆயுத அடக்குமுறை, என்பனதமிழ் தேசியத்துக்குஎதிராகவேண்டும்மென்றே சிங்கள பேரினலாதத்தால் பதவியில் இருந்த மேலாதிக்க ஏகாதிபத்தியசார்பு முதலாளித்துவ ஒற்றை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகிறது.தற்போது இதை மகிந்த சிந்தனை மூலம் செயற்படுத்தப்படுகிறது. யார் தமிழ் மக்களின்தேசிய ஜனநாயக உரிமைக்காக போராடுகின்றார்களோ அவர்கள் உண்மை, நீதி, ஐக்கியம்,நேர்மை, சுதந்திரம், நாட்டின் இறையாண்மை என்பவற்றுக்காக போராடுகின்றார்களோ அவர்கள்திஸ்ஸநாயகத்தின் விடுதலையையும் முன்னெடுக்க வேண்டும். அதனுடன் தமிழ் மக்களின்சுதந்திரம் மற்றும் மோசமான அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் இந்த கொடிய அரசிடம்இருந்து இந்த நாட்டு மக்களை காக்கவேண்டும். யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்றுகூறப்படுகிறது. அந்த வெற்றியை உறுதிப்படுத்த ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள்முன்னெடுக்கப்படுகிறது மகிந்தராஜபக்ஸ தற்போது அரசன் ஆக்கப்பட்டுள்ளார் இவர் அந்நியநாட்டவரை வெற்றி கொண்டது போல் ஆக்கப்பட்டுள்ளார். அப்படியாயின் திஸ்ஸநாயகத்தின்மீது ஏன் இந்த பழிவாங்கல் எல்லாவற்றையும் மறந்து ஏன் ஒற்றுமை படக்கூடாது பயங்கரவாததடைச்சட்டத்தையும், அவசரகால தடைச்சட்டத்தையும் ஏன் நீடித்து வைத்திருக்க வேண்டும்.அரசியல் தீர்வை முன்வைத்து தமிழ் மக்களுக்கு சட்டபூர்வமான அந்தஸ்த்தை ஏன்வழங்கக்கூடாது. இங்கே லெனின் கூறியதை ஞாபகப் படுத்த விரும்புகின்றேன் என்ன விதமானமுக்கியமான செயற்பாடுகளை முதலாளித்துவ அரசு கொண்டிருந்தாலும் அந்த அரசுமுதலாளித்துவத்தின் பயங்கரவாத சர்வாதிகாரத்தை பிரதிநிதித்துவ படுத்துவதாகவே அமையும்.பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால சட்டமும், அரசாங்கத்தின் சட்டபூர்வமான பயங்பரவாதசெயற்பாடுகளுக்காக மக்களுக்கு எதிராக உள்ளன. திஸ்ஸநாயகத்திற்கு எதிராக தொடரப்பட்டவழக்கும் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட 20 வருட சிறைத்தண்டனையும், அரசினதும்,ஆட்சியாளரினதும், ஆட்சிப் போக்கின் தன்மையை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்தபோக்கு தமிழ் மக்களின் தாயகப் பூமியை நாசப்படுத்துவதுடன் ஒற்றை ஆட்சியுடன் கூடியசிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழர் தாயகத்தின் நிலங்கள் யாவையும்பொறுப்பு ஏற்கப்பட்டு அவற்றை பல்தேசிய கம்பணிகளுக்கு விற்பதே அவர்களின் நோக்கமாகும்.இதை எதிர்ப்பவர்கள் யாவரும் ஒடுக்கப்படுபவர்கள் எனவே திஸ்ஸநாயகம் எமக்காக தியாகத்தைபுரிந்துள்ளார். இந்த வரலாற்று ரீதியான செயற்பாட்டில் நாங்கள் எடுக்கும் சுதந்திரம்ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தில் இணையவேண்டும். திஸ்ஸநாயகத்தைபோல்;ஆயிரக்கணக்கானவர்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் உள்ளனர். அவர்களுக்காகஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
சுரேந்திர அஜித் ரூபசிங்க. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதம்)
0 விமர்சனங்கள்:
Post a Comment