தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதை தடுமாறுகின்றதா?
தமிழ்மக்களின் போராட்டம் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பும் பெரியளவில் உதவியுள்ளது. தமிழ் தேசியகூட்டமைப்பினர் சர்வதேச மட்டத்தில் இப்போராட்டத்தை உரிய வழியில் முன்னெடுத்துசெல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தஉண்மையாகும்.
மேலும் தென் இலங்கையில் இப்போராட்டத்திற்கான ஆதரவு தளத்தைஉருவாக்குவதிலும் அவர்கள் பெரிய அளவில்அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாக அறியமுடிகிறது.தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முதன் முதலில்முன்வைத்து பிரச்சாரம் செய்தது பாராளுமன்றம்சென்றது என எல்லா நடலடிக்கைகளையும் மேற்கொண்டவர்களும் இவர்களே.
பின்னர் விடுதலைப்போராட்டம் தொடர்பில் இவர்கள் கடைப்பிடித்தபின்னடிப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில்பெரியளவில் ஆத்திரத்தை கிளறி இருந்தது. இதுபடிப்படியாக மேல் வந்து ஆயுதப் பொராட்டமாகவலுவடைந்தது. இன்று ஆயுதப் போராட்டம் தோல்விகண்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்செயற்பாடுகள் முனைப்பு பெற்றுள்ளது.
ஆனாலும்அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படிஅமையப்போகின்றதுஎன்பதில் பல சந்தேக நிலைகள்காணப்படுகின்றன.கடந்த 7-9-2009ல் ஜனாதிபதியை தமிழ் தேசியகூட்டமைப்பினர் சந்தித்தனர். இவர்கள் முன்வைத்தஎந்த கோரிக்கையும் ஜனாதிபதி ஏற்கவில்லை என்பதேமேற்படி சந்திப்பின் பெறுபேறாக காணப்படுகிறது. முன்புஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம்ஆணித்திரமாக தமது நிலையை வலியுறுத்தி சந்திப்பதை மறுத்துவந்த இவர்கள் தற்போது ஏன் திடீரென சந்திப்பதற்கு தயாராகின்றனர்.
வன்னி முற்றுகைக்கு பின்னர் தமிழ் மக்கள் பேரழிவைசந்தித்திது இருந்தனர். இந்த விடயத்தில் தமிழ்கமுதல்வர் கருணாநிதி மீதும், இந்திய அரசின் மீதும்தமிழ் மக்களுக்கு கட்டுக்கடங்காத ஆத்திரம்காணப்பட்டது ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பு தமிழக முதல்வர் கருணாநிதியையும்,இந்திய அரசையும் போய்சந்தித்துவந்தனர். இது இலங்கைதமிழர் தொடர்பாக முதல்வர்கருணாநிதியையும் இந்தியஅரசும் காடடிய அக்கறைசரியானது என அங்கிகாரம்அளிப்பதை போலவேகாணப்பட்டது.வழமை போல் இந்தியாவுக்குபோய் வந்த பின்னர் தமிழ்தேசியகூட்டமைப்பினர் தமிழ்மக்கள் தொடர்பில் இந்தியாஉறுதியான நடவடிக்கை எடுக்கஇருக்கிறது என்றுஅறிக்கையும்விட்டனர் ஆனால் இந்தியாமரணச்சான்றிதழை பெறுவதில் காட்டிய அக்கறைஇலங்கை தமிழர் விடயத்தில் காட்டவில்லை என்பதேஉண்மையாகும். தற்போது கடந்த 7-9-2009ல்ஜனாதிபதியை தமிழ் தேசியகூட்டமைப்புசந்தித்தபின்னர் அரசாங்கத்துடன் இணங்கி போகும்நிலை காணப்படுவது போல் தெரிகிறது.
இதை உண்மைப்படுத்தும் நிலைக்குரிய நிகழ்வுகள்காணப்படுகின்றன. வவுனியா நகரசபை பதவியேற்புவைபவத்pல் தேசிய கீதத்துடன் பதவியேற்பு வைபவம்நடைபெற்றுள்ளது. ஒருகாலத்தில் 6வது அரசியல்திருத்தத்திற்காக பாராளுமன்றத்தை பகிஸ்கரித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று தேசிய கீதத்துடன்;பதவியேற்பை நிகழ்த்துகிறது.அணமையில் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின்நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டபாராளுமன்ற உறுப்
பினர் பத்மினி சிதம்பரநாதனின் உரை ஒரு அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினரின் உரையை ஒத்திருந்தது. இந்த நிகழ்வில்கழந்துகொண்ட அமைச்சர் சரத் அமுனுகம ஜேர்மன்அரசாங்க செயற்பாடுகளை கண்டித்திருந்ததுடன் யுத்தவெற்றி பற்றியும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தாம்
உலக சாதனை புரிந்துள்ளதாகவும் பெருமைபேசியிருந்தார்.
இதன் பின்னர் பேசிய பாராளுமன்றஉறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தமிழ் மக்கள் முதலில்அகிம்சை வழியில் போராடினர் பின்னர் வன்முறை மூலம்போராடிவந்தனர் இன்று வன்முறைதோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க ஏதாவது செய்யுங்கள் என்றுபிச்சை கேட்பது போல் பேசி இருந்தார் இருந்தார். வன்னிமுகாம்களில் தவிக்கும் மக்களின் நிலை தொடர்பாகஒரு வார்த்தை கூட இவர் பேசவில்லை. சிலசமயம்வன்னியில் அல்லல்படும் மக்களின் பலர் பத்மினி சிதம்பரநாதனுக்கு வாக்களித்து இருக்கலாம்.கடந்த 09-09-09ம் திகதி இடதுசாரி முன்னணி உட்பட பல இடதுசாரிஅமைப்புக்கள் ஒன்றினைந்து வன்னி முகாம்களில்உள்ள மக்களை வெளியேற அனுமதிக்க கோரியேமேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேற்படிபோராட்டத்தில் கலந்து கொள்ளமாறு தமிழ் தேசியகூட்டமைப்புபிற்கு அழைப்பின் மேல் அழைப்புவிடுக்கப்பட்ட போதும் அவர்களில் எவரும்இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அண்மையில்பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தென்இலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்துபோராடபோவதாக அறிவித்திருந்தார். எனவே இவர்கள் 9ம் திகதி போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றநம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது ஆனால் அவர்கள்வரவில்லை.இன்று சில தமிழ் தேசிய கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் செயற்பாடுகளுக்குநற் சான்றிதழ் வழங்குகின்றனர். சிலர் ஜனாதிபதியைகூடகட்டி தழுவுகின்றனர்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பில்தமிழ் மக்கள் திடமாகவே உள்ளனர் என்பதை அண்மையதேர்தல்கள் தெளிவாக காட்டுகிறது. ஆனால் தமிழ்தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வைபிரதிபலிக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
ஜனா
0 விமர்சனங்கள்:
Post a Comment