உலகிலேயே மிகச் சிறிய தாயாக விளங்கும் பெண்மணி மூன்றாவது தடவையாக கர்ப்பந் தரித்துள்ளார். மிகவும் சிறிய தோற்றடைய ஸ்ரேசி ஹெரால்ட் (35 வயது) என்ற இப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவிப்பது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என எச்சக்கப்பட்ட நிலையிலேயே அவர் மீளவும் கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவிக்க தயாராகியுள்ளார். 2 அடி 4 அங்குல உயரமான ஸ்ரேசியின் கணவர் வில் 5 அடி 9 அங்குல உயரடையவராவார். அமெரிக்க கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேசி ஹெரால்ட்டின் வயிற்றிலுள்ள ஆண் குழந்தை, ஏற்கனவே அவன் உயரத்தில் அரைப்பங்கு உயரத்திற்கு உள்ளது. தனது கர்ப்பம் குறித்து ஸ்ரேசி ஹெரால்ட் விபரிக்கையில்,""ஆரம்பத்தில் நாங்கள் இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளைப் பிரசவிக்க திட்டமிட்டிருக்கவில்லை. குழந்தைகள் என்பது இறைவனால் இப்பூவுலகிற்கு அழைக்கப்பட்ட கொடைகளாகும் '' என்று குறிப்பிட்டார்.
தற்போதைய உயரத்தில் தனது இளைய மகளை ,ஸ்ரேசி ஹெரால்ட்டால் தூக்கி வைத்திருக்க முடியவில்லை. ஸ்ரேசி ஹெரால்ட்டும் வில்லும் 2004 ஆம் ஆண்டு சந்தித்து குடும்பத்தினரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment