யுத்தக்குற்றங்களுக்காக சந்திரிகாவை கைது செய்ய மனித உரிமைப் பேரவைத் திட்டம்?
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரவை உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு ஒன்றில் வைத்து சந்திரிகாவை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்சியில் இருக்கும் நாட்டுத்தலைவர் ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால் சந்திரிகாவை வெளிநாடு ஒன்றில் வைத்து கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றதாகக் கூறிப்பிடப்படும் 231 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment