படகு அகதிகளின் கதியை எழுதப்போகும் ஆஸி. பிரதமர்
சட்டவிரோதமாக படகுகளில் பயணித்து அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் மக்களின் நிலை சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, அவர்கள் பாரியதோர் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை நோக்கி படகுகளில் பயணித்து வருவதுடன் இன்று ஆங்காங்கே நிர்க்கதியாக உள்ளனர்.
யுத்தம் நிலவிய கடந்த காலங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பயணித்த சில படகுகள் ஆழ்கடலில் கவிழ்ந்து பரிதாப மரணங்களை சந்திக்க நேர்ந்ததுடன் படகோட்டிகளால் மணல் திட்டிகளில் இறக்கிவிடப்பட்ட நிலையில் பெரும் துயரங்களையும் சந்திக்க நேர்ந்தது.
இதேவேளை, யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த காலகட்டத்தில் தலைமன்னார் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற படகு ஒன்று இராமேஸ்வரத்துக்கு அருகே கடலில் கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் என பலரும் பலியான சம்பவம் பலரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியமை மறந்துபோக முடியாத ஒன்றாகும்.
தமிழகத்தை நோக்கி அகதிகள் எவரும் தற்போதைய சூழ்நிலையில் படையெடுக்காத அதேவேளை, ஐரோப்பிய நாடுகளை நோக்கிய இந்தப் படகு துயரம் தொடர் கதையாகவே இருந்துவருகின்றது.
இது ஒருபுறம் இருக்க, அவுஸ்திரேலியா வடமேற்கு கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த படகு ஒன்று நேற்று கவிழ்ந்துள்ளதாக தகவல்கள் தெவிக்கின்றன. இதில் 39 பேர் வரை பயணித்ததாகத் தெவிக்கப்படும் அதேவேளை, 22 பேர்வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன் கடலில் மூழ்கிய 17 பேரை அவுஸ்திரேலிய கடற்படையினர் மீட்டுள்ளதாகவும் தெயவருகின்றது.
அவுஸ்திரேலிய கரையோர கண்காணிப்பு விமானம் இந்தப் படகை அவதானித்ததன் பின்னரே அவுஸ்திரேலிய மீட்புக்கப்பல் அந்த இடத்துக்கு விரைந்துள்ளதுடன் கடலில் மூழ்கிய அகதிகளையும் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏலவே அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கி சென்ற அகதிகளின் நிலைமை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளான நிலையில், இந்த விவகாரம் அவுஸ்திரேலியாவுக்கு மேலும் தலையிடியைக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது எனலாம். அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடிவரவுக் கொள்கையில் உறுதியாக இல்லை எனவும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவார்ட்டின் கொள்கையை தற்போதைய பிரதமர் கெவின் றூட் தளர்த்தியதன் விளைவே அவுஸ்திரேலியா இந்த நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சி அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் எந்தவிதமான கருணையையும் காட்டாது நடந்துகொள்வதாகவும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினைகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் நோக்கவேண்டும் எனவும் மாறாக கெவின் றூட்டின் நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதாக இருப்பதாகவும் அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை அவரை பெரும் நெருக்கடிக்குள் இட்டுச்சென்றுள்ளது.
மறுபுறம், அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே இவ்விவகாரம் இராஜதந்திர தியான சிக்கலை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க டிகின்றது. இந்தோனேஷிய கடற்பரப்பில் இருந்தும் மீட்கப்பட்டதாக தெவித்து "ஓஷியானிக் வைக்கிங்' எனப்படும் அவுஸ்திரேலிய கண்காணிப்பு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட 78 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை இந்தோனேஷிய அதிகாரிகள் பொறுப்பேற்க தவறியுள்ளதுடன் குறித்த கப்பலில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு எதிர்வரும் ஆறாம் திகதிவரை காலக்கெடுவும் வழங்கியுள்ளனர். அவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளதைக் காணமுடிகின்றது.
எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர், குறித்த அகதிகள் இந்தோனேஷிய கடற்பரப்பில் இருந்தே கைதுசெய்யப்பட்டமையினால் இரு நாட்டு உடன்படிக்கைக்கு அமைய இந்தோனேஷியாவே அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தோனேஷிய மாகாண ஆளுநரோ, இந்தோனேஷியா அகதிகளைக் குவிக்கும் நாடல்ல எனக் கூறியிருந்தார். இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ள குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஏக்கங்களுக்கு மத்தியில் காணப்படுகின்றனர்.
இதேவேளை, படகுச் சிறுமி ஒருத்தி தமக்கு புகலிடம் வழங்குமாறு உருக்கமாக விடுத்த வேண்டுகோள் அவுஸ்திரேலிய உள்ளூர் வானொலி ஊடாக பிரதமர் கெவின் றூட்டிடம் போட்டுக் காண்பிக்கப்பட்ட போதும் அவர் எந்தவிதமான பிரதிபலிப்பையும் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடுக்கடலில் தத்தளிக்கும் படகு மக்களின் கதியை தீர்மானிக்கும் கட்டத்தில் அவுஸ்திரேலியா இருந்துவரும் அதேவேளை, பிரதமர் கெவின் றூட்டின் நடவடிக்கைகளை சர்வதேசம் மிகுந்த ஏக்கத்துடன் பார்த்துவருகின்றது. எங்கே குடிவரவு கொள்கை மீது அவர் தமது உறுதியை காட்டுவாரா?
அல்லது மனிதாபிமானத்தின் பேல் அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பே இன்று பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment