தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும் மிருகத்தை வேட்டைக்காரன் கூட கொல்வதில்லை
வரலாற்றிலும் இலக்கியங்களிலும் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கும் மிருகத்தை வேட்டைக்காரன் கூட கொல்வதில்லைஎன கூறப்பட்டுள்ளது அப்படியாயின் மூழ்கிக்கொண்டிருந்த மனிதன் மீது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாஒருவரே மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதை ஒழுக்கமுள்ள சமூகத்திலுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் தெவித்துள்ளது.
பம்பலப்பிட்டி கடலுக்குள் வைத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை கண்டித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது; தனியார் ஊடக நிறுவன படப்பிடிப்பாளனால் பதிவுசெய்யப்பட்ட இது தொடர்பான காட்சியை இந்நாட்டு மக்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பார்த்தனர் .
கடலில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவர் கரையேறுவதற்கு முயற்சித்தவேளையில் மற்றொரு நபரினால் அவர் மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவமே அந்த காட்சியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடலில் மூழ்கி உயிழந்த அந்த இளைஞன் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என அவர்மீது தாக்குதல் நடத்திய நபர் பொலிஸ் திணைக்கள அதிகாகளிடம் தெவித்துள்ளார்.
தண்டனை கோவைச்சட்டத்திலும் குற்றவியல் நடைறைச்சட்டத்திலும் இவற்றை யொத்த பிற கட்டளைச்சட்டங்களிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,வலது குறைந்தவர்கள் அல்லது கடமைகளை சுயமாக செய்துகொள்ள முடியாத நபர்கள் போன்றோருக்கு சிறப்புமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந் நிலையில் சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிஸ் அதிகாகளின் கைகளினால் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுமாயின் அதனை எக்காரணத்திற்காகவும் அனுமதிக்க முடியாது.
சட்டத்தை பொலிஸ் தனது கையிலெடுத்து செயற்பட்டதன் காரணத்தினால்தான் அங்குலானை பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் பலியானார்கள்.
அந்த சம்பவத்தை எம்மால் மறந்து விடடியாது.
அச் சம்பவம் இடம்பெற்ற குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையானது துரதிஷ்டவசமான நிலைமையினையே எடுத்துக்காட்டுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment