கனடாவில் புலி வால்கள் நடாத்திய ‘வட்டுக்கோட்டை தீர்மான’ வாக்கெடுப்பை 84 வீதமான தமிழ் மக்கள் நிராகரித்தனர்!
கனடாவில் புலி வால்கள் நடாத்திய ‘வட்டுக்கோட்டை தமிழீழ தீர்மானத்துக்கு’ ஆதரவு கோரிய தேர்தலை, 84 வீதமான தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்! புலி வால்களே தெரிவித்த தகவலின்படி (இத்தகவல் கூட உண்மையோ தெரியாது. ஏனெனில் தேர்தல் நடாத்துவது, வாக்குப் போடுவது, எண்ணுவது, வெளியே அறிவிப்பது எல்லாமே அவர்கள் தான்!), 48,583 பேர் இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றியுள்ளனர். இத்தொகை கனடாவில் வாழும் சுமார் 3 லட்சம் தமிழ் சனத்தொகையில் ஏறத்தாழ 16 வீதமாகும்.
வாக்களித்தவர்களில் 99.82 வீதமானோர் தீர்மானத்துக்கு ஆதரவாக “ஆம்” என வாக்களித்துள்ளனர் என புலி சார்பு ‘தமிழ் நெற்’ புளுகித் தள்ளியுள்ளது. புலி வால்களால் ஏற்றி இறக்கப்பட்டவர்கள், பின்னையென்ன இல்லையா என்றா வாக்களிப்பார்கள்?
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் கோட்டையென வர்ணிக்கப்படும் நோர்வேயில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பிலும், அங்கு வாழும் 83 வீதமான மக்கள் பங்குபற்றாது நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில், இயக்கத்தின் பெயரால் பொதுமக்களை மிரட்டிப் பறித்த பணத்தில், கனடாவில் வியாபாரங்களை ஆரம்பித்தவர்களும், வீடு - கார் என வாங்கியவர்களும் (அவற்றுக்கும் இப்பொழுது பங்குச் சண்டைகள் நடந்து வருகின்றன), இனிமேல் தமது பணத் தேவைகளுக்கு வேறு வழி வகைகளை (ஏற்கெனவே கைவந்த கலையான, ‘மட்டை’ விளையாட்டு போன்ற) நாடுவதைத் தவிர, வேறு வழியில்லையென்பதையே வாக்களிப்பு சம்பந்தமான கனடிய தமிழ் மக்களின் பிரதிபலிப்பு (Response) எடுத்துக்காட்டி நிற்கிறது
கனடா கந்தசாமி
Thenee web
0 விமர்சனங்கள்:
Post a Comment