பிரபாகரனின் படகுப்பயணம்
ஒரு முறை பிரபாகரனும், சூசையும் சுமார் 50 ற்கு மேற்பட்ட புதிதாக இயக்கத்தில் இணைந்த போராளிகளுடன் முல்லைத்தீவு கடலை சுற்றிப் பார்ப்பதற்காக படகொன்றில் பயணம் செய்தனர். புதிய போராளிகளில் சிறுவர்களும் அடங்குவர். அவர்கள் எவருக்குமே நீச்சல் தெரிந்திருக்கவில்லை. படகை சூசை செலுத்திக்கொண்டிருந்தார். படகின் பின்பகுதியில் பிரபாகரனும் அவரைச்சுற்றி புதிய போரளிகளும் நின்று கொண்டிருந்தனர். படகு மிகவும் பயங்கர ஆழமான நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறிது ஆட்டம்கண்டது. அந்த ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத சிறுமி ஒருத்தி கடலில் விழுந்துவிட்டாள். உடனே கூட இருந்த அனைவரும் "ஐயோ பிள்ளை ஒன்று கடலில் விழுந்துவிட்டது. யாராவது காப்பாற்றுங்களேன்" என்று அழுது குழறி கூப்பாடுபோட்டார்கள்.
இந்த அலறலைக்கேட்ட சூசை படகை நிறுத்திவிட்டு படகின் பின் பகுதிக்கு வருவதற்குள்
பிரபாகரன் கடலில் பாய்ந்து தத்தித்தத்தி நீந்திச்சென்று ஒரு வழியாக அந்த பிள்ளையைக்காப்பாற்றி படகில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தானும் தாவிப்பிடித்து படகினுள் ஏறிக்கொண்டார்.
உடனே படகில் உள்ள புதிய போராளிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி ஆர்வத்தில் "தன் உயிரை துச்சமாக மதித்து பிற உயிரைக்காப்பாற்றிய பிரபாகரன் வாழ்க" "தேசியத்தலைவர் வாழ்க" "சூரியத்தேவன் வாழ்க" "எங்கள் அண்ணன் பிரபாகரன் வாழ்க" என்று கோஷமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பிரபாகரன், முகத்தில் எதுவித மகிழ்ச்சியும் இல்லாமல் மிகவும் கடுமையான முகத்துடன் ஒரு மூலையில் நின்று கொண்டு புதிய போராளிகள் அனைவரையும் மாறிமாறி முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதனை அவதானித்த சூசை பிரபாகரனுக்கு அருகில் சென்று என்ன பிரபா எல்லாரும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் நீ செய்த துணிகரமான செயலுக்கு உன்னை பாராட்டி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நீ ஏன் இப்படி முகத்தை கடுமயாக வைத்துக்கொண்டு எல்லாரையும் மாறி மாறி உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு பிரபாகரன் "என்னை யார் படகில் இருந்து கடலுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்று தெரியவில்லை" என்றார்.
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment