புலம் பெயர்ந்த புலிகளின் ஊடங்களின் புலி உறுப்பினர்களால் மேற்கொள்ளபட்ட ஊழல்கள் அம்பலமாகிறது.
தலைமையின் உத்தரவையடுத்து முதலில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் நாடு ரீதியாக துப்பரவு செய்யப்பட்டார்கள்.பன்னாடுகளில் இயங்கிய அமைப்பு நிறுவனங்கள் துப்பரவு செய்யப்பட்டன. அந்த வகையில் டிடிஎன் துப்பரவு செய்யப்பட்டது. TTN ல் புரையோடிப் போயிருந்த நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாள்வது மிகவும் கடினமாக இருந்த போதும், அவற்றை அப்போதைக்கு நடத்தக்கூடியவர்கள் என இலண்டனில் இருந்த கருணைலிங்கம்,வாகன், கணக்காளர் நரேன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழர்களின் தேசிய ஊடகமான டிடிஎன்னை பக்குவமாக நடத்துவதாக கூறிக்கொண்டு, தேசியத்துக்கு துரோகத்தை விளைவிக்கத் தொடங்கினார்கள் இவர்கள். இறுதியில் TTNன் நிறுவனம் மூடப்பட்டமைக்கு நரேன் அவர்களே காரணமஎன்பதை வன்னிக்கு ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இருந்தும் இன்னுமொரு காரணம் கருணைலிங்கம்அவர்களும் என்பதும் பின்னர் தெரியவந்தது. இவர்களினால் TTNயை மூடாமல் நடத்தக்கூடிய வாய்ப்பு இருந்தும் மூடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
தமிழர்களின் தேசிய ஊடகமான TTNற்கு சிறுகச்சிறுக சேர்த்த உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் அங்கு வேலை செய்த சிலரால் பங்கு போடப்பட்டது. பங்கு போட்ட பொருட்கள் தேசியத்துக்கென மக்களிடம் வெளிப்படையாக கேட்டுவாங்கிய சொத்துக்கள் – இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் மூலதனமான தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட பொருட்கள் – மக்களிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளப்பட்ட பணங்கள் என்பன மக்களுக்கும் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கும் தெரியாமல் அங்கிருந்தவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. நிறுவனத்தை மூடும் தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிய வந்ததும் உபகரணங்களை இடம்மாற்றி கொண்டார்கள்.இடம்மாற்றிய பொருட்களில் நிறுவனப்பதிவில் இருந்தமை மட்டும் பிரெஞ்சு அரசால் கைப்பற்றப்பட்டது, ஏனையவை இவர்களால் சுருட்டப்பட்டது.
நிறுவனம் மூடும் அறிவுறுத்தல் சிலதினங்களில் கிடைக்கப்பெறும் எனத் தெரிந்ததும், அவசர அவசரமாக பழைய நிலுவைகளை அறவிட்ட சம்பவங்களும் உண்டு. கடைகளிற்குச் சென்று விளம்பரப்பாக்கிகளை வேண்டியதும் அண்மையில் உள்ள சந்தாதாரர்களிடம் ஆட்களை அனுப்பி சந்தாப்பணத்தை நேரடியாகப் பெற்றுக்கொண்டதும், TTNகேகுரிய காசோலைகள் நிறுவனத்தில் பணிபுரிந்த சிலரும், மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் கொடுத்து மாற்றப்பட்டதும் உண்டு. இத்தொகைகள் கணக்கிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனிப்பட்ட பெயர்களில் மாற்றிய காசோலை விபரங்களை விரைவில் உங்கள் முன் வைக்கவிருக்கின்றோம். நிறுவனத்தை மூடிய பின்னர் எந்தவிதமான இறுதி அறிக்கைகளும் அமைப்புக்கு சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் சமர்ப்பிப்பதை விட்டு விட்டு வேறு வியாக்கியானங்களை கதைத்து பிரச்சனைகளை திசைதிருப்பிவிட்டனர். அமைப்பும் காலத்தின் தேவைகருதி எல்லாவற்றிற்கும் மௌனமாக இருந்தது. ஆனால், விடயங்களை அவதானித்துக் கொண்டு இருந்தனர். இவைபற்றிய ஓடியோ ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இப்படியாக TTNனிற்கு மூடுவிழா வைத்து, பல பெயர்களில் சுத்துமாத்துப்பண்ணி தற்போது “GTV”எனும் துரோகமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. “GTV”யின் சுத்துமாத்துக்கள் முதல் அவர்களின் எதிர்கால திட்டம் வரை நாம் ஆதாரத்துடன் இதில் உங்கள் முன் வைக்கவிருக்கின்றோம். அதில் வரும் சாட்சிகள் சில வேளைகள் “GTV”யிற்குள் நிச்சயம் பிளவை ஏற்படுத்தும். எனவும் சமூக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்
- ரி.பி.சி வானொலி செய்தி
தேணி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment