அண்டன் பாலசிங்கமும் வைத்தியரும்
அண்டன் பாலசிங்கம் ஒருநாள் தனது குடும்ப டாக்டரிடம் போய் எனக்கும் அடேலுக்கும் இதுவரையில் குழந்தைகள் கிடையாது. எனக்கென்று ஒரு வாரிசு வேண்டும். ஆகையால் நான் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டர் இவரைப்பலவிதமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் அதெல்லாம் வேலைக்காவது, உங்களுக்கு அந்த பாக்கியம் கிடையாது, எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிவிட்டார். ஆனால் அண்டன் பாலசிங்கம் இந்த டாக்டர் சொன்னதை கேட்காமல், இருபத்தியெட்டு வயசு பெண் ஒருவரை கல்யாணம் செய்துவிட்டார்.
நாலு மாசம் கழிச்சு திரும்பவும் அதே டாக்டரிடம் போய்… என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் மனைவி இப்ப மூணு மாசம் கற்பமா இருக்கிறார் என்று பெருமையா சொன்னார்.
அதுக்கு டாக்டர் நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தடவை ஆப்பிரிக்க காட்டுக்கு போனபோது ஒரு சிங்கம் பயங்கரமா உறுமிக்கொண்டு என் எதிரில் வந்தது. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சு செத்துப் போச்சு என கதையை முடித்தார்.
உடனே பாலசிங்கம் அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னுக்கு இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டிருப்பாங்கன்னு சொன்னார். அதுக்கு டாக்டர் மிகவும் அமைதியாக உங்க மனைவி விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னார்.
பிரபாகரன் வாழ்ந்து வந்த ஊரில் ரவுடி ஒருவனை புலிகள் இயக்கத்தினர் கைது செய்து பிரபாகரன் முன் கொண்டு சென்று விசாரனைக்காக நிறுத்தினார்கள், விசாரணையின் போது அவனது மனைவியையும் பிரபாகரன் கூப்பிட்டு விசாரித்தார்.
பிரபாகரன்: ஏம்மா, உன் கணவன் ஒரு ரவுடி என்பது உன் திருமணத்திற்கு முன்பே தெரியுமா?
பெண் : ஓம் தெரியும்.
பிரபாகரன்: ரவுடி என்று தெரிந்தும் ஏன் அவனை திருமணம் செய்து கொண்டாய், வேறு மாப்பிள்ளை வரவில்லையா?
பெண்: இரண்டு பேர் தான் வந்தாங்க, அதில் ஒருத்தர் உங்களை மாதிரி மகாரவுடி என்று சொன்னாங்க, அதான் இவரே பரவாயில்லைன்னு கட்டிவிட்டேன்.
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment