வேட்டைகாரன் படத்தை எவரும் புறக்கணியாதீர்கள்; இரசித்துப்பாருங்கள்
பிரபாகரன் 2006இல் யாழ்ப்பாணம் நோக்கிய தனது படை எடுப்பில் வெற்றி பெற்றால் அங்கு எல்லா இளைஞர் யுவதிகளையும் கட்டாய பயிற்சிக்கு உட்படுத்தி தமிழீழம் காணக் கனவு கண்டார். ஆனால் அவரது கனவு பலிக்கவில்லை.அதனால் வன்னியில் மிகமோசமான கட்டாயசேர்ப்புகளை செய்து ஒரு இளம் சமூகத்தையே பலியிட்டதுமில்லாமல் எதிரியின் சிறைகளில் வாடுகின்றனர். இப்போது உங்களுக்கு புரிகிறதா? உங்களையும் ஏன் இடைசுகம் உசுப்பிவிட்டார் என்பதை அறிவுகூர்மையாக சிந்தித்துப்பாருங்கள் புரியும்.உங்களது எதிர்காலத்தையும் பாழக்க ஒரு கோஸ்டி புலம் பெயர் நாடுகளில் முகாமிட்டுள்ளது. இந்த கோஸ்டியின் வார்த்தையாலங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்.
உங்கள் ஒவ்வொருவரதும் கனவுலகின் நாயகர்களாக விஜய் அல்லது அஜித் அல்லது சூரியா அல்லது வேட்டைகாரன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் அன்ரனியோ இருந்திடத்தான் போகிறார்கள். அண்மையில் மே தினத்துக்கு அரசின் அழைப்பில் விஜய் அன்ரனி யாழ்ப்பாணம் செல்லவில்லையா? அல்லது சிங்கள இசையமைப்பாளர்களுடன் அவர் சேர்ந்து செய்யும் அல்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா? நாளை சேரனோ அமீரோ சீமானோ எடுக்கவிருக்கும் படத்துக்கு விஜய் அன்ரனி இசையமைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம். அந்த நேரத்தில் சீமானின் படத்தை புறக்கணிப்பீர்களா? ஏதோ இந்த விடுதலைப்போராட்டம் தமிழ் நாட்டு சினிமாவை நம்பித்தான் தொடங்கப்பட்டதா? புத்தியுள்ள இளையவர்களாக சிந்தியுங்கள். செயற்படுங்கள். இளையோர்களே நீங்கள் இப்படி புறக்கணிக்க சொல்லிவிட்டு கள்ள சீடிகளிலும் இணையத்தளத்தின் வழியாகவும் பார்த்து மகிழ்வது ஒன்றும் தெரியாதது அல்லவே!!
வேட்டைக்காரன் திரைப்படப்பாடல்களை உச்சரிக்காமலா இருக்கப்போகிறீர்கள்.
இளையோர் அமைப்பை முன் தள்ளிவிட்டு திரைமறைவில் பின்னால் இருந்து அதன் பலனை அனுபவிக்க ஒரு குழுமாட்டு கூட்டம் தலைமையின்றி தவிக்கின்றது. அவர்களின் இரை தான் நீங்கள். தம்பிகளே! தங்கையரே! உங்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது நோக்கமல்ல.எமக்கு தன்னம்பிக்கை முதலில் வேண்டும். அது உங்களின் ஒவ்வொரு செயல்களிலும் இருந்துவரவேண்டும். வெறும் வேட்டைக்காரனையும் சண் குடும்பத்தையும் புறக்கணிக்க சொல்வதால் எமது இலக்கு தவறப்படுகிறது. எமது சிந்தனைகள் குறுக்கியவட்டத்துள் முடக்கப்படுகிறது. நாம் உங்கள் முன் வைக்கும் இக்கோரிக்கையை எம்மவர்களால் உணர்வாளராக கருதப்படும் உசுப்பேற்றும் பேச்சாளர் இயக்குனர் சீமான் தனது நாம் தமிழர் இயக்கத்தில் 4இலட்சம் தொண்டர்களை பதிவு செய்துள்ளார். அதில் வெறும் 10ஆயிரம் தொண்டர்களை சேகுவாரா வழியில் எமது தாயகத்துக்கு சென்று களமாட அழைத்துவருவாரா எனக்கேட்டுப்பாருங்கள். இல்லவே இல்லை. இந்த நாம் தமிழர் இயக்கத்துக்கு பின் புலத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் சீமானுக்கும் இடையில் நடந்த பேரம் பற்றி உங்கள் யாருக்கும் தெரியுமா? இந்த விடயத்தை கட்டுடைத்துள்ளோம். மிகுதியை நீங்களே விரைவில் அறிந்துகொள்வீர்கள்.
தமிழ் நாட்டு சினிமாவையும் பேசுவதற்கு சீமான்களையும் நம்பியா தமிழீழ விடுதலை போராட்டம் தொடங்கப்பட்டது?? மேடையில் எமது போராட்டத்தை முன் வைத்துப்பேச ஈழத்தமிழர் இல்லையா? உங்களுக்கு வெட்கம் வரவில்லையா ?
காலம் காலமாக காங்கிரசில் இருந்த தமிழருவி மணியனை அழைத்து பேச வைக்க முடிகிறது. ஆனால் விஜய் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசில் சேரப்போவதாக சொன்னதை வைத்து நீங்கள் செய்யும் அரசியலோ மூடத்தனமாக உங்களுக்கு தெரியவில்லையா? சினிமா அது அவர்களின் தொழில் அதை சுற்றி குடிசைத்தொழிலாக எத்தனையோ பேருடைய பாட்டாளி மக்களுடைய நாளாந்த வாழ்க்கை தங்கியுள்ளது என்பது தெரியுமா ?
சீமான் இயக்கிய தம்பி திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஒரு சிங்களத்தாய்க்கு பிறந்து இன்று பல சிங்களப்படங்களில் நடித்துவருகிறார்.இதனால் நீங்கள் தம்பி படத்தின் சிடீக்களை அழித்துவிடுவீர்களா? அல்லது அது முடிந்த விடயம் என விட்டுவிடுவீர்களா?
மறுஆய்வு பகிரங்க அறைகூவல் , தம்பி படத்தின் இறுவெட்டுக்களை அனைத்து நாடுகளிலும் பகிரங்கமாக அழிப்பீர்களா? முடியுமா?
சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் ஒரு பொது நோக்கிலான கோட்பாட்டை வகுத்துவிட்டு இந்தப்புறகணிப்பு பற்றி சிந்தியுங்கள்!!
இன்றைய தியாகி நாளை துரோகியாகலாம். இன்றைய துரோகி நாளை தியாகியாகலாம். இது தமிழ் தேசியத்தின் புலம்பெயர் கஸ்ரோவின் காவலர்கள் எழுதியவிதி. இந்த விதியை மாற்றுவதற்கான போராட்டங்களை தொடங்குங்கள். இந்தக்காவாலிகள் பதுக்கி வைத்துள்ள உங்களின் சொத்துக்களை பணத்தை பொது நிதியாக்க போராடுங்கள். எமது பொக்கற்றுக்களை சுத்தம் செய்யுங்கள். அதைவிடுத்து சண் குடும்பம் ஏதோ புலம் பெயர்ந்த மக்களின் நிதியைத்தான் நம்பியிருப்பதான குடுட்டுத்தனமான சிந்தனையில் மூழ்கி விடாதீர்கள்.
மறு ஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment