சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு ஏற்படுத்தப் போகும் பாதிப்பு என்ன?
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெறவுள்ளது. வேட்பாளர்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் கால அவகாசம் நேற்று நண்பகலுடன் முடிவடைந்து விட்டது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் 23 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதில் பிரதான வேட்பாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் திகழ்கின்றனர். இதனை விட இடதுசாரி ன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவும் குறிப்பிட்டு சொல்லக் கூடியவராக இருக்கிறார்.
தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதுடன் கட்டுப்பணத்தையும் நேற்று முன்தினம் செலுத்தியுள்ளார். இதேபோல் முஸ்லிம் வேட்பாளர்களாக பிரதிக் கல்வி அமைச்சர் மயோன் ஸ்தபாவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம். இலியாசும் போட்டியிடுகின்றனர். இவர்களும் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 14 பேர் மட்டுமே போட்டியிட்டனர். ஆனால், இம்முறை 23 வேட்பாளர்கள் களத்தில் குதிக்கத் தயாராகவுள்ளனர்.
இந்த வேட்பாளர்களில் பலர் வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்னர் பேரம் பேசல்களில் ஈடுபட்டு இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் நிலையும் காணப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிட ஏன் முன்வந்தார்? இதற்கான காரணம் என்ன? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக மனதாக முடிவு செய்திருந்த நிலையில் ஏன் இவர் மட்டும் இத்தகைய முடிவினை எடுத்தார் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் கூடிய எம்.பி.க்கள் 17 பேர் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்தனர். இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கத்தின் எம்.பி.க்களான என். ஸ்ரீகாந்தன், எம்.கே. சிவாஜிலிங்கம், வினோநோகராதலிங்கம் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோக்கையினை ன்வைத்துள்ளனர்.
இதேபோல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் செயலாளரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கக்க வேண்டும். அதற்கான டிவை எடுக்க வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார்.
இதற்கு கஜேந்திரன் எம்.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளார். இதனை விட ஒரு சில எம்.பி.க்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும் வகையில் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோர வேண்டும் என்றும் கருத்து தெவித்துள்ளனர்.
இத்தகைய பல்வேறுபட்ட கருத்துகள் தெவிக்கப்பட்ட போதிலும் இறுதியாக கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்றும் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மீண்டும் கூடி முடிவு எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே சிவாஜிலிங்கம் எம்.பி. கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு தன்னிச்சையானது. தேர்தலில் தனித்து வேட்பாளர்களை களமிறக்குவதில்லை என்ற முடிவையே கூட்டமைப்பு எடுத்துள்ளது என்று நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தெவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணி) ஆகிய நான்கு கட்சிகளின் எம்.பி.க்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது உண்மை. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுப்பட ஒரு முடிவினை எடுத்த பின்னர் சிவாஜிலிங்கம் எம்.பி. மட்டும் தன்னிச்சையான முடிவு எடுப்பது எந்த வகையிலும் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ நன்மை பயக்கும் என எண்ணி விட டியாது.
ரெலோ அமைப்பின் எம்.பி.க்களான என்.ஸ்ரீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தனித்து வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தாலும் அதன் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தனியான வேட்பாளர் களமிறங்கும் விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என ஏகமனதாக முடிவு எடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எத்தகைய முடிவானாலும் அது கூட்டமைப்பு ஒன்றிணைந்தே எடுக்கும். தனி வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கடந்த வாரம் திட்டவட்டமாக தெவித்திருந்தார். இந்த நிலையிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கம் வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தனை அழைத்து பேசியிருந்தனர். இதனை விட எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவையும் சம்பந்தன் எம்.பி. பல தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனை விட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷவை ரெலோ அமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் சந்தித்திருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி. சந்தித்திருந்தார்.
இவ்வாறு தனித்தும் கூட்டாகவும் சந்திப்புகள் இடம்பெற்று வந்த சூழ்நிலையிலேயே சிவாஜிலிங்கத்தின் களமிறங்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் முடிவு எடுத்திருந்தனர். இதனால் வடக்கு கிழக்கில் பெருமளவான மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அன்று விடுதலைப் புலிகள் பலம் பொருந்திய நிலையில் இருந்தாலும் கூட புலிகளின் கோரிக்கையையும் மீறி வடக்கு கிழக்கில் கணிசமான மக்கள் வாக்களித்திருந்தனர். முழுமையாக தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் நிலைமைகள் மாறியிருக்கும்.
ஆனால், அன்று விட்ட தவறை மீண்டும் புரிவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ தமிழ் தலைமைகளோ இடம் விடக் கூடாது.
ஜனாதிபதித் தேர்தலில் தனித்து தமிழ் வேட்பாளர் அல்லது முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவதால் ஏற்படப் போகும் பலன்தான் என்ன?
தமிழ், முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்படுமே தவிர வேறு எதுவும் இடம்பெறப் போவதில்லை.
தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவுக்கு ரணாக சிவாஜிலிங்கம் எம்.பி. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு கூட்டமைப்புக்குள் சிறிய முரண்பாட்டை கொண்டு வருமே தவிர வேறொன்றுக்கும் உதவாது.
கட்டுப்பணத்தை நேற்று முன்தினம் தாக்கல் செய்துவிட்டு கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் எம்.பி., கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை நியமிக்குமானால் போட்டியிலிருந்து தான் விலகிக் கொள்ளத் தயார் என்றும் அதற்கான கட்டுப்பணத்தை கூட்டமைப்பு செலுத்த வேண்டும் எனவும் அவர் கருத்து தெவித்திருந்தார்.
இந்தக் கருத்தானது கூட்டமைப்புக்கான அவரது மிரட்டலாகவே அமைந்துள்ளது. வேட்பாளரை நிறுத்துங்கள் அல்லது நான் போட்டியிட்டே தீருவேன் என்பது போலவே அவரது செயற்பாடு அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள், குழப்பங்கள் ஏற்படுவது எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாது.
தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. நான்கு கட்சிகளும் ஒருமித்து ஒரே குடையின் கீழ் சென்றால் மட்டுமே எதிர்காலத்திலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள். இல்லையேல் நிலைமைகள் மாற்றமடையும் என்பது திண்ணமாகும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்து களம் இறங்காது பிரதான வேட்பாளருடன் பேரம் பேசல்களை நடத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை யார் உறுதிப்படுத்த முனைகிறாரோ அவரை ஆதரிப்பதே இன்றைய சூழ்நிலையில் சயான முடிவாக அமையும்.
இதனை விடுத்து தேர்தலை பகிஷ்கரிக்கக் கோருவதோ, தனித்துப் போட்டியிட்டு சிறுபான்மையினன் வாக்குகளை சிதறடிப்பதோ நாமே எமக்கு படுகுழியைத் தோண்டும் செயலாகவே அமையும். எனவே தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள கூட்டமைப்பு எம்.பி. எம்.கே.
சிவாஜிலிங்கம் மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் எம்.பி.
ஐ.எம். இலியாஸ் ஆகியோர் தமது முடிவுகளை மீள் பசீலனை செய்வது நல்லது.
கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு முரணாக சிவாஜிலிங்கம் எம்.பி. ஜனாதிபதித் தேர்தலில் குதித்து கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவது கடினமாகும். அப்படி வாக்குகள் கிடைக்காவிடின் அது அவரது பாராளுமன்ற அரசியலையே எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கிவிடும்.
யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், எஸ். கஜேந்திரன், சந்திரகாந்தன் சந்திரநேரு, எஸ். ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். இவர்களில் சிவாஜிலிங்கம் உட்பட சிலர் நாடு திரும்ப முடியாத இக்கட்டான சூழலும் காணப்பட்டது.
ஆனால் தற்போது எஸ். ஜெயானந்த மூர்த்தி எம்.பி.யை விட ஏனைய அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் சிலர் அரசாங்க உயர் மட்டத்துடன் சமரசம் இன்றி நாடு திரும்பியிருக்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. தேர்தல் காலத்தில் நாடு திரும்பியுள்ள இவர்கள் கூட்டமைப்புடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இல்லையேல் அது பல்வேறு சந்தேகங்களுக்கும் வழிவகுத்து விடும்.
எனவே இரு பிரதான வேட்பாளர்களுடனும் இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதி பாதுகாப்பு வலய விவகாரம், மக்களின் மீள்குடியேற்றம் என்பன குறித்து திட்டமொன்றை முன்வைத்து பேச வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக யார் உறுதி தருகின்றாரோ அவரைத் தேர்தலில் ஆதரிக்கும் டிவினை கூட்டமைப்பு எடுப்பதே சிறந்ததாகும். இதனையே இன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே கூட்டமைப்பின் முடிவுக்கு ரணாக தீர்மானம் எடுத்துள்ள சிவாஜிலிங்கம் எம்.பி.க்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. வேட்பு மனுவினை தாக்கல் செய்யாது கூட்டமைப்பின் ஒற்றுமையை அவர் உறுதிப்படுத்தினால் எதிர்காலம் சிறக்கும். இல்லையேல் தேர்தலில் தமிழ் மக்களின் தகுந்த தீர்ப்பு அவருக்குக் கிடைக்கும்.
அது அவரது கட்சியையும் பாதிக்கும் என்பது மட்டும் உண்மை.
தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து களைத்துப் போய் மனடைந்த நிலையில் உள்ளனர். எனவே தற்போதைய நிலையை சிந்தித்து தமிழ் தலைமைகள் செயற்பட்டால் நல்லது. இல்லையேல் சோகங்களும் துக்கங்களுமே தமிழருக்கு தொடர் கதையாகும்.
கஜமுகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment