யாழ்ப்பாணத்தில் புதிய வடிவில் பணப்பறிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின் விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர்.
இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment