திடீரெனமுளைக்கும் அனுதாபம் தேடும் புகைப்படங்களை வைத்து மீசை முளைக்காத தமிழ் தேசிய மக்குகள் மீசை முளைத்த கதை புனைவது கடந்த 6மாத காலத்தில் பல்வேறு உருவக கதைகளூடாக காட்சி மாறியுள்ளது.
அந்த வழியில் எங்கிருந்தோ பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்து துவாரகாவின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு துவாரகா என்றே இந்த தேசிய மக்குகள் நிறுவி விட்டனர்.
மறுஆய்வின் தடயவியல் நிபுணரின் தகவல்படி இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும் போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இசைப்பிரியா சிறீராம் புலிகளின் பல குறும்படங்களில் (வேலி) நடித்துள்ளார். அதனை விட முன்னர் ஒளிவீச்சு சஞ்சிகை பின்னர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்பாளராக எம்மத்தியில் வந்துபோயுள்ளார். இந்த நேரத்தில் இசைப்பிரியாவுக்கும் எமது வீரவணக்கங்கள். இவரை பிரபாகரனின் மகளாக பார்ப்பதை விட்டு ஒரு தமிழ் தாயின் பிள்ளையாக, மகளாக பார்க்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாத வரை தமிழினம் தனி மனித வழிபாட்டில் இருந்து விடுபட சிறிது காலம் எடுத்தே தீரும். இதேவேளை கொல்லப்பட்ட புலிகளின் பெயர் பட்டியலென சிறிலங்காவின் அரச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில் சிறீராம் அவர்களின் பெயர் வந்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்த தேசிய மக்குகளின் பொய் புனைவுகளை நம்பி இப்போது நாமும் இது துவாரகா இல்லையென ஒப்புவிப்பதால் பிரபாகரனும் அவர் தம் குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாக இருப்பதாக கற்பனை வளர்க்காதீர்கள் என்பதை மறுஆய்வின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
நன்றி மறு ஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment