கமலஹாஸனின் உண்மை முகம் உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்
இந்தியாவிலிருந்து வைகறை வெளிச்சம் என்ற சஞ்சிகை வெளி வருகின்றது. அதன் நவம்பர் மாத இதழில் இந்திய முஸ்லிம்களை மிகவும் வேதனைப் படுத்திய கமல ஹாஸனின் திரைப்படம் பற்றிய விமர்சனமொன்றை வெளியிட்டிருந் தது. இந்திய முஸ்லிம்களின் நிலை யையும் அரசியலையும் விளங்கிக் கொள்வதற்காக வாசகர்களுடன் இதனை பகிர்ந்துகொள்கின்றோம்.
ஆர்.எஸ்.எஸ். காரர்களே, இந் துத்துவ சக்திகளே! இதோ உங்க ளைப் போல் நானும் ஒருவன் என பறைசாற்றி படத்தினை எடுத்திருக் கிறார் கமல ஹாஸன் அவர்கள்.
"ப்ச்சா பச்சா ராம்கா, பக்கி சப் ஹராம்கா", "துலுக்கனை வெட்டு,... கட்டு" என கோஷம்போடும் இந் துத்துவா வெறியர்களின் கோஷத்திற் கும் உங்கள் படத்தின் வசனங்களுக் கும் எந்த வித்தியாசமும் தெரிய வில்லை. ஏன் அதைவிட ஒருபடி மேலாகவே உங்கள் பட வசனம் இருக்கிறது.
மருதநாயகம் கான்சாஹிப் எப் பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தில் சேர்ந்தார் என்பது தெரிய வில்லை. ஆமாம் சமுதாய அக்கறை பற்றி வாய்கிழிய பேசுகிறீர்களே, நீங்கள் எடுக்க முயன்ற மருதநாயகம் என்ன வாயிற்று? இரண்டுமுறை உங்களுடைய படப்பிடிப்பு நடத்து மிடத்தில் தகராறு செய்தவுடன் அது பாதியிலேயே நின்றுபோயிற்று. உங்களைப் பற்றி நீங்கள் சொல்லிக் கொள்ளும் சமுதாய அக்கறையுள்ள நபர் நீங்களென்றால் அதை எப்பாடு பட்டாவது முடித்திருப்பீர்கள்.
ஆனால், பாவம் உங்களுக்குத் தான். "பாடி ஸ்ட்ராங், பேஸ்மன்ட் வீக்" ஆயிற்றே.
அதென்ன கமலஹாசன் அவர் களே, குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி யில் எரித்துக் கொல்லப்பட்டவர்கள் உங்களுக்கு மூன்றாவது மனை விகளாகத் தெரிந்திருக்கிறார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முன்னு தாரணங்களை படத்தில் தெரியாமல் விட்டுவிட்டீர்களோ? ஒருவேளை அவர்கள் மூன்றாவது மனைவிதான் என்றாலும் உங்கள் பார்வையில் அவர்கள் கொல்லப்பட வேண் டிய வர்களோ?
குஜராத்தின் சாத்தான் மோடியின் சிந்தனைக்கும் உங்களின் சிந்தனைக் கும் பெரிதாக எந்த வித்தியாசமு மில்லையே. இதைத்தானே மோடி யும் பல மேடைகளில் சொன்னார். முஸ்லிம்கள் மூன்று, நான்கு திரு மணங்கள் செய்துகொள்கிறார்கள். அதிகமான குழந்தைகளைப் பெற் றுக் கொள்கிறார்கள் என்று. அதனால், அவர்கள் கருவறுக்கப்பட வேண் டியவர்கள் என்று சொல் லாமல் சொன்னார். (மருதநாயகம்) கான் ஸாஹிப் எப்போது மோடியானார். அவரும் இதையே வழிமொழிகி றார்.
ஒருவேளை உங்கள் குடும்பத் தில் இத்தகைய வேதனை நிகழ்ந் தால் நீங்களும் இரண்டாவது மனை விதானே, மூன்றாவது மனைவி தானே என்று இருந்துவிடுவீர்களோ?
எங்கள் சகோதரிகள் குஜராத்தில் எரிந்தபோது நாங்கள் அடைந்த காயத்தை விட நீங்கள் அதைப் படத்தில் செய்திருக்கும் கிண்டல் எங்களை அதிகமாக காயப்படுத்தி யிருக்கிறது. அதுவோர் இனப் படு கொலை. இறைவன் ஒருவனே, நம் அனைவரும் ஒருவனிடமிருந்து பிறந்தவர்கள் என்ற உண் மையை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இலட்சக்கணக் கானோர் இன்றும் வீடிழந்து, தங்கள் சகோதர, சகோதரிகளை, தங்கள் குழந்தைகளை, தங்கள் பெற்றோர் களை பறிகொடுத்து விட்டு நடைபி ணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
பெஸ்ட் பேக்கரியைப் பொருத் தவரை ஷாகிரா ஷேய்க் என்ற பெண் மணியின் முயற்சியினால் தான் அந்தக் கொடுமை உலகத்தின் பார்வைக்கு வந்தது. இத்தகையவர் களை நோக்கி இறந்தது உங்கள் மூன்றாவது பெண் டாட்டிதானே. இத்தனையாவது குழந்தைதானே என கிண்டலடிக்கும் விதத் தில் வசனத்தை வைத்திருப்பது உங்களுடைய வக்கிரப் புத்தியையே காட்டு கிறது.
அது என்ன படம் முழுவதும் குஜராத் கலவரத்தைப் பற்றியே பேசு கிறீர்கள்? ஆனால், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விசாரணைக் கைதி களை பிடித்துக் கொல்கிறீர்கள். இதிலும் இந்துத்துவா சக்திகளின் இன் னொரு முகமாக தெரிகிறீர்கள். இது நிச்சயமாக அவர்களுடைய வழி முறையே. முஸ்லிம் களை குண்டு வைத்துக் கொல்ல வேண்டும். முஸ் லிம்களில் ஒரு கூட்டத்தி னரை இதற்காக கைது செய்து அவர்களை உள வியல் ரீதியாக துன்புறுத்த வேண் டும். அவர்களையே மீடியாக்களில் குற்றவாளிகளாகக் காட்டவேண் டும். இன்னும் சிலரை சந்தேகப் படும் போதே சுட்டுக் கொல்ல வேண்டும்.
மாலிகோன், அஜ்மீரில் நோன்பு திறக்கும்போது குண்டுவைத்தது, ஐதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு மற்றும் இன்னும் இந்தியா வின் பல இடங் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தபோதும் அதில் பல முஸ்லிம்கள் கொல் லப் பட்டபோதும் முஸ்லிம்களே உடன டியாக கைதுசெய்யப்பட்டார்கள். மீடியாக்களில் உடனடியாக குற்ற வாளியாக்கப்பட்டார்கள். அவர்களு டைய குடும்பங்களும் உளவியல் வன்முறைக்கு ஆளாகின. அந்த முஸ் லிம்கள் இந்தியாவை விட்டு அந் நியப்பட்டு நின்றனர்.
ஆனால், பின்னர் கார்கரே போன்ற நேர்மையான அதிகாரியால் பிரக்கி யா சிங் சாத்வி போன்ற பெண் சாமி யார்களும் புரோகித் போன்ற ராணு வத்தில் பணிபுரிந்த உயர் ராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு உண்மை வெளி வந்தது.
ஆனால், இந்தக் குண்டுவெடிப்பு களுக்காக கைதுசெய்யப்பட்டு துன்பு றுத்தப் பட்ட முஸ்லிம்கள், எண்க வுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அவர் களின் குடும்பங்களின் நிலை அதோ கதிதான். அதை விசாரித்த கார்கரே கதியும் அதோ கதிதான். அவரும் சுட்டுக் கொல்லப்பட் டார்.
இதைத்தான் இந்துத்துவா சக்திகள் விரும்புகின்றன. இதையே தான் படத்தில் நீங்களும் சொல்கிறீர் கள். படம் முழுவதும் இந்துத்துவா சக்திகளின் கொடு மைகள் பற்றி பேசிவிட்டு கொலை செய்வது அஹம துல்லாஹ்வையும் அப்துல் காதரை யுமா? அது என்ன உங்களின் சமன் பாடு எந்த விதத்திலும் பொருந்த வில்லையே.
குற்றம்சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத் தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்பதே அனைத்து அறிவுஜீவிக ளின் அவா, இஸ் லாத்தின் வழிகாட் டுதல். ஆனால் இஸ்லாமிய சமூகத் தைச் சேர்ந்தவர் களை, விசாரணைக் கைதிகளை பிடித்தவுடன் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என சொல் கிறீர்கள்.
மாலிகோன் மற்றும் இதர இடங் களில் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப் பட்டு விசாரணைக் கைதிக ளாக இருந்த முஸ்லிம்களாக இருந்த அவர்கள் தரப்பில் வாதாட வந்த வழக்கறிஞர்கள் வழக்கை நடத்த விடப்படாமல் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சக்திகளால் தாக்கப்பட் டனர். நீதிமன்ற நடவடிக் கைகள் முடக்கப்பட்டன.
ஆனால், இதற்கு நேர்மாறாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச் சாரியாருக்கு எதிராக ஆஜரான அரசதரப்பு வக்கீல் இங்கே தாக்கப்பட்டார். இந்துத்துவா சக்தி களோ வழக்கை நடத்தக்கூடாது என்று தான் சொல்லின. ஆனால், நீங்கள் ஒருபடி மேலே போய் அவர் களை விசாரிக்கத் தேவை யில்லை. கொன்றுவிடுங்கள் என்று இந்துத் துவா சக்திகளுக்கு பாடமெடுக் கும் ‘சர்சங் சாலக்காக’ மாறியிருக்கிறீர் கள்.
உங்களுக்கு ஒரு புள்ளிவிவரம் தெரியுமா? கமல்ஹாஸன் அவர் களே, ஆண் டொன்றுக்கு எண்கவுன் டர் மூலம் இந்தியாவில் செய்யப் படும் படுகொலை கள் 1023. இதில் ஒன்றுதான் மோடி அரசாங்கத்தால் நிகழ்த்தப் பட்டிருக்கும் 19 வயது பட்டப்படிப்பு படித்துக் கொண்டி ருந்த இர்ஷத் ஜஹான் என்ற பெண் ணின் எண்கவுன்டர் படுகொலை. உங்களைப் போன்ற மனநிலையில் உள்ள வர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலையை நீதிமன் றமே வெளிக் கொண்டுவந்து கண் டித்துள்ளது.
ஆக வருடத்திற்கு 1023 பேர் அதாவது நாள் ஒன்றுக்கு 3 பேர் இந் தியாவில் கொல்லப்பட்டுக் கொண் டிருக்கும்போது உங்களுடைய இந் துத்துவா இரத்த வெறிக்கு அது போத வில்லை போலும். இன்னும் எத்தனை படுகொலைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
அஜ்மல் கஸாப் நேபாளில் கைது செய்யப்பட்டான். கார்கரேயை சுட்டுக் கொல்ல உபயோகப்படுத்தப் பட்டான். அவனுடைய வீடியோ மட்டுமே தாக்குதல் நடந்துகொண் டிருக்கும்போதே வெளியிடப்பட் டது. பின்னர் அவன் மட்டுமே உயிருடன் கைதுசெய்யப்பட்டான். இப் போது அவன் சிறையில் பாஸ்மதி அரிசியால் செய்த பிரியானி கேட்கி றான். கறி கேட்டு சண்டை பிடிக்கி றான் என்று பொதுமக்களை வெறுப் பேற்றும் வண்ணம் செய்திகள் வெளி யிடப்படுகிறது.
அதேசமயம் தினமும் மூன்று பேர் வீதம் அப்பாவி என தெரிந்தே சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்த செய்திகள் வெளியிடப்படு வதே இல்லை. இந்த மாதிரியான திட்டமிடப்பட்ட மீடியா பிரச்சாரத் தின் தீவிர வலையில் நீங்களும் வீழ்ந்து விட்டீர்கள் என்றே தோன்று கிறது.
இறுதியாக நீங்கள் படத்தை வெளியிட தேர்ந்தெடுத்திருக்கும் நேரம். கோயம் புத்தூர் குண்டு வெடிப்பு விசாரணை நமது உயர்நீதி மன்றத்தில் முழுவதுமாக முடிவ டைந்துள்ள நேரம், இப்போது இந்த படத்தை நீங்கள் வெளியிட்டிருக் கும் நோக்கம் மேல் முறையீட்டு வழக் கின் தீர்ப்பில் நீங்கள் மேலாண்மை செலுத்த நினைத்திருப்பது. அதாவது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கொல்ல வேண்டும் என்ற உங்களு டைய எண்ணத்தை தீர்ப்பில் திணிக்க விரும்புவது என்பதை பாமரர்களும் அறிவார்கள்.
ராமாயண சீரியல் பாபர் மசூதி இடிப்பை எளிதாக்கியது. வட மாநி லங்களில் இதே போன்று வழக்கின் தீர்ப்புகள் வரும்போது இத்தகைய படங்கள் வெளியி டப்படுவது தீர்ப் பின் போக்கை மாற்றியது. அதே பாணியை கையாண்டு நேரம் பார்த்து படத்தை வெளியிட்டிருக்கி றீர்கள்.
கவலைப்பட வேண்டாம். இந் தப் படத்திற்குப் பின் உங்களை உலக நாயகனே என படவுலகமே தலை யில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது. மோடிக்கு அளிக்கப்பட்டது போல் உங்களுக் கும் 46 வகை யுடன் விருந்துகள் அளிக்கப்படலாம். உங்கள் மீது வன்முறையைத் தூண்டிய தற்காக வும், மக்களிடையே மத அடிப்படை யில் பகையை வளர்த்ததற்காக வும் வழக்குத் தொடங்கிட வேண்டும். அரசு உனக்கு தோளில் தட்டி தரு வது வெந்த புண்ணிலே பாய்ச்சாப் பட்ட வேல்.
மொத்தத்தில் படத்தில் தாடியு டன் கமலஹாசன் நடிக்கவில்லை. நரேந்திர மோடியே நடித்ததுபோல் உள்ளது. எனவே, படத்தின் தலைப்பு உன்னைப் போல் ஒருவர் என்பது சரிதான். நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்தப் படம் சமுதாயத்தில் முஸ்லிம்கள் மீது என்னென்ன கொடு மைகளை விளைவிக் கும் என்று தெரிந்தும் பணம் சம்பாதிப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளீர் கள். பணம் கிடைத்தால் என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளலாம் என நினைக்கும் ஒழுக்கக்கேடர்களின் தொழில் தர்மத்தை தவிர வேறெது வும் உங்கள் படத்தில் தெரியவில்லை.
பாபர் மஸ்ஜித் இடிப்பு. அந்த வழக்கில் முக்கிய ஆவணங்களை சுமந்து சென்றவரை கொலை செய்த அத்வானியின் புத்திசாலித்தனம் நாடாளுமன்றத் தாக்குதலை அரங் கேற்றிய காஷ்மீர் எஸ்.டி.எப் இன் திறமை, அதனை மொத்தமாய் மூடி மறைத்த ரோபிர்சிங். அவரை பாது காத்த அத்வானி (கக்ஈகீ என்ற மனித உரிமைகளின் குழு இதை அச்சடித்து வெளியிட்டுள்ளது), தெஹல்காவில் இந்துத்துவ வாதிகள் கொடுத்த வாக்குமூலம் இவற்றை மையமாகக் கொண்டு சில படங்களை தயாரித்து பாரும். இந்துத்துவ வாதிகள் உங் களை நீங்கள் இந்தப் படத்தில் செய் திருப்பதைப் போல் செய்துவிடு வார்கள்.
நன்றி: வைகறை வெளிச்சம்
0 விமர்சனங்கள்:
Post a Comment